என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கொரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 பேர் குணமடைந்தனர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட் களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதன் எதிரொலியாக ஈரோட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ தாண்டி வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 76பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் 627பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Next Story






