என் மலர்tooltip icon

    ஈரோடு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து வாக்குசாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து வாக்குசாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட் டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி,  புளியம்பட்டி நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டு களுக்கும், நகராட்சி களில் 102 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 610 வார்டுகள் என 771 வார்டு களுக்கு தேர்தல் நடை பெற உள்ளது. இதில் மாநகராட்சியில் 59 வார்டுகளில் 352 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

    பவானி, கோபி, சத்திய மங்கலம், புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் 453 பேரும், 42 பேரூராட்சிகளில் 1919 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 771 பதவிகளுக்கு 2724 வேட் பாளர்கள் போட்டியிட்டுள் ளனர். கடந்த 10 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற் கொண்டுள்ளனர். இதனிடையே நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதையடுத்து இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் வேட் பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பணப் பட்டுவாடா செய் வதை தடுக்க பறக்கும் படைகள் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.  மாவட் டத்தில் மொத்தம் 1251 வாக்கு சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 

    முறைகேடுகளை கண்காணிக்க 55 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வாக்குசாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    நாளை மறுநாள் 18-ந் தேதி காலை 10 மணி முதல் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குசாவடி மையங் களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதால் வாக்குசாவடிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி உத்தர விட்டுள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    ஈரோடு:
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    கொரோனா  உருமாற்றம் அடைந்து  ஒமைக்ரான்  தொற்று வேகமாக பரவ தொடங்கியது. மேலும்  மீண்டும் கொரோனா  அதி கரிக்கத் தொடங்கியது.  

    தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திரையரங்கு களில் 50 சதவீத பார்வை யாளர்களுக்கு  மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

    தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12&ந் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறி விக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் திரையரங்கு களில் 100 சதவீத பார்வை யாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 திரையரங்கு கள் உள்ளன. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 11 திரையரங்குகள் உள்ளன. இன்று முதல் திரை யரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக் கப்பட்டு வருகின் றனர்.

    இதேப்போல் உணவகத் திலும் இன்று முதல் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின் றனர். மேலும் மால்கள், வணிக நிறுவனங்களில் இன்று முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறைகளுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    திரையரங்குகளில் மாஸ்க் அணிந்து வருபவர் கள் மட்டுமே உள்ளே அனு மதிக்கப்பட்டு வருகின்றனர்.
    ஈரோடு மாநகராட்சி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 148 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 148 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சி, 59 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற, 19&ந் தேதி நடத்தப்பட்டு, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

    வருகிற, 22-ந் தேதி அங்கேயே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக, ஓட்டுப்பெட்டிகள் வைப்பு அறை மூன்று தயார் செய்யப்பட்டுள்ளன. அதன் அருகே மூன்று அறைகளில் தலா, 14 மேஜைகள் வீதம் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

    மூன்று அறைகளிலும் சுவரை ஒட்டிய பகுதியில் வேட்பாளர்களின் முகவர்கள் அமரவும், அதனை அடுத்து, கட்டை, கம்பி மூலமாக தடுப்பு வேலி அமைத்து, உள்ளே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    இங்கு ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமிரா என, மூன்று அறைகளில் தலா, 14 கேமிராவும், ஒவ்வொரு அறையிலும் ஒட்டு மொத்த அறையையும் கண்காணிக்கும் வகையில் கேமராவும் அமைக்கப்பட்டது.

    தவிர, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, அங்கிருந்து எந்திரங்கள் கொண்ட பெட்டியை எடுத்து வரும் பாதைகள், அவ்வளாகம் என, 148 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தினர். அவற்றை அங்கேயும், மாநகராட்சி கமிஷ்னர் அறை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து கண்காணிக்கும் வகையில் வசதி செய்துள்ளனர்.

    அதுபோல தற்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள, கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கின்றனர்.

    விரைவில் வர இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி, பேரூராட்சி தேர்களிலும் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பெறுவார்கள் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரசாரம் செய்தார்.

    தி.மு.க.வை கார்ப்பரேட் கட்சி என்று விமர்சனம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை. 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது ஒவ்வொரு தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிமிகு வீரர்களாக செயல்பட்டு கழக பணி செய்துதான் இன்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் பெரிய வெற்றியை பெற்று உள்ளார்கள்.

    முக ஸ்டாலின்

    விரைவில் வர இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி, பேரூராட்சி தேர்களிலும் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தியமங்கலம் அருகே கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹடா செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு வருடம் தோறும் பிப்ரவரி மாதம் 16 ,17 ,18 ஆகிய தேதிகளில் மாசிமகா திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழாவை காண சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வருவது வழக்கம். மூன்று நாட்களும் கோவில் வளாகத்தில் கிடா வெட்டி பொதுமக்கள் வழிபட்டு செல்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கியது. இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்பதற்காக காராச்சி கொரை சோதனைச்சாவடியில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அதில் 100 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என வனத்துறை கூறினர்.

    இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளரான ஐய்யப்பன் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை (17-ந்தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளரான ஐய்யப்பன் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.

    வேட்பாளரின் உயிரிழப்பு குறித்து செய்தி அறிந்த அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஐய்யப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை (17-ந்தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்ணாமலை


    பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.

    அவர் வில்லரசம்பட்டி, ரங்கம்பாளையம், கொல்லம்பாளையம் பைபாஸ், பிரப் ரோடு, விநாயகர் கோவில், லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம், கனிராவுத்தர் குளம், 60 அடி ரோடு, கொங்கம்பாளையம் ரோடு, ராயப்பாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் இன்று மாலை ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    அவர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே, ஹோட்டல் சிம்னி அருகே திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்கிறார்.

    மாசி மாதம் பிறந்து உள்ளதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. இதையொட்டி உள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இன்று வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    ஈரோடு:

    மாசி மாதம் பிறந்து உள்ளதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. இதையொட்டி உள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இன்று வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. 

    இங்கு தினசரி கடைகளும், வார சந்தை கடைகளும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள் கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெரும்.

    இந்த வாரசந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலில்  உள்ளது. 

    இதனையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

    இதன் காரணமாக கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து  வியாபாரிகளும் வரவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஜவுளி சந்தை கூடியது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 20 சதவீதம் வரை நடைபெற்றது.

    இதேப்போல் மாசி மாதம் பிறந்து உள்ளதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. இதையொட்டி உள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இன்று வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

    இன்று 40 சதவீதம் சில்லரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்துடன் தேர்தல் முடிவடைய உள்ள தால் அடுத்த வாரத்திலிருந்து ஜவுளி சந்தை வியாபாரம் சூடுபிடிக்கும் என வியா பாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மொடக்குறிச்சி:

    விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி காந்திஜி வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது தாய் செல்லம்மாள் (55). 

    இந்நிலையில் நேற்று செல்லமாளுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து செல்லமாள் தனது பேரனுடன்  மருத்துவ மனைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது மொடக்குறிச்சி ஊஞ்சபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று செல்லம்மாளின் சேலை மொபட்டின் சக்கரத்தில் சிக்கி கொண்டது. 

    இதனால் 2 பேரும் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்ததில் செல்லம்மாளுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி இரவு செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1,700 வரை பதிவானது. 

    முன் களப்பணியாளர்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

    இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 

    இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது.  

    2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக் குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தார்.

    இந்நிலையில் மாவட்ட த்தில் 3-ம் அலையில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. 

    இதைத் தொடர்ந்து முதலில் 2 ஆயிரம் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4 ஆயிரமாக உயர்ந்தது. அதன் பின்னர் 6 ஆயிரமாக அதிகரித்தது. 

    இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 26 லட்சத்து 29 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

    தற்போது தினமும் 3500 முதல் 4 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னிமலையில் கோவில் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில்  கோவில் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள மறவ பாளையத்தை சேர்ந்த வர் முத்துசாமி (66) விவசாயி. இவர் சென்னிமலை முருகன் கோவிலுக்கு  தனது மோட் டார் சைக்கிளில் வந்தார். 

    அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வந்தார். 

    அப்போது அங்கு தனது மோட்டார் சைக்கிள் காணததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வாகனத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து முத்துசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். ஈரோடு மணப்பள்ளம் வி.ஜி.பி. காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (44). இவர் சம்பவத்தன்று  சென்னிமலை முருகன் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். 

    அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்தார். மீண்டும்  வந்து பார்த்த போது அங்கு மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார்.

    சென்னிமலை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்கு பதிவு செய்து அந்த 2 மோட்டார் சைக்கிள்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். 

    பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் பணியில் 1,798 போலீசார், 260 ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் 5 அடுக்கு  பாதுகாப்பு போடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஓட்டுப்பதிவு நாளில் போலீஸ் சார்பில் 95  நடமாடும் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவும் 2 அல்லது 3 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்கும்.  இதேப்போல் 15 அதிவிரைவு படை குழுக்கள் அமைக்கப்படும். 

    நடமாடும் குழுக்கள் இவற்றைக் கண்காணிக்க செக்மண்ட் இன்ஸ்பெக்டர் குழுவும், இதை கண்காணிக்க அதிவிரைவு படை இன்ஸ்பெக்டர் குழுவும், டி.எஸ்.பி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்டோர் ஓட்டு பதிவு முறையை கண்காணிப்பார்கள்.
     
    5  அடுக்கு முறையில் ஓட்டுபதிவை போலீசார் கண்காணிப்பார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் விதி மீறல் பிரச்சினை ஏற்பட்டால் போலீஸ் குழுக்கள் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×