என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெடடிப்பாளையத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்த போது எடுத்தப்படம்.
வாக்குப்பதிவு நாளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பணியில் 1,798 போலீசார், 260 ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஓட்டுப்பதிவு நாளில் போலீஸ் சார்பில் 95 நடமாடும் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவும் 2 அல்லது 3 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்கும். இதேப்போல் 15 அதிவிரைவு படை குழுக்கள் அமைக்கப்படும்.
நடமாடும் குழுக்கள் இவற்றைக் கண்காணிக்க செக்மண்ட் இன்ஸ்பெக்டர் குழுவும், இதை கண்காணிக்க அதிவிரைவு படை இன்ஸ்பெக்டர் குழுவும், டி.எஸ்.பி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்டோர் ஓட்டு பதிவு முறையை கண்காணிப்பார்கள்.
5 அடுக்கு முறையில் ஓட்டுபதிவை போலீசார் கண்காணிப்பார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் விதி மீறல் பிரச்சினை ஏற்பட்டால் போலீஸ் குழுக்கள் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






