என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளி சந்தையில்  சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    X
    ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பு

    மாசி மாதம் பிறந்து உள்ளதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. இதையொட்டி உள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இன்று வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    ஈரோடு:

    மாசி மாதம் பிறந்து உள்ளதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. இதையொட்டி உள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இன்று வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. 

    இங்கு தினசரி கடைகளும், வார சந்தை கடைகளும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள் கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெரும்.

    இந்த வாரசந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலில்  உள்ளது. 

    இதனையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

    இதன் காரணமாக கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து  வியாபாரிகளும் வரவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஜவுளி சந்தை கூடியது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 20 சதவீதம் வரை நடைபெற்றது.

    இதேப்போல் மாசி மாதம் பிறந்து உள்ளதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. இதையொட்டி உள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இன்று வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

    இன்று 40 சதவீதம் சில்லரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்துடன் தேர்தல் முடிவடைய உள்ள தால் அடுத்த வாரத்திலிருந்து ஜவுளி சந்தை வியாபாரம் சூடுபிடிக்கும் என வியா பாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×