என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி வட்டார அளவிலான மகளிர் குழு உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நஞ்சை ஊத்துக்குளி சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி வட்டார அளவிலான மகளிர் குழு உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி  நஞ்சை ஊத்துக்குளி சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மொடக் குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் உமா குத்துவிளக்கேற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மொடக்குறிச்சி வட்டார மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் விக்டோரியா வரவேற்று பேசினார். 

    இதில் ஆரோக் கியத்தை மேம்படுத்த இயற்கையாக கிடைக்கும் காய்கறிகள் மற்ற பொருள்களில் தயாரிக் கப்பட்ட உணவு மற்றும் ஆரோக்கிய பானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

    இதில் நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், குலவிளக்கு, விளக்கேத்தி, உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் மகளிர்குழுக்கள் கலந்து கொண்டதில் 46புதூர் ஊராட்சிக்கு முதலாவது பரிசும், குளு£ர் ஊராட்சிக்கு 2&வது பரிசும், கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு 3&வது பரிசும் வழங்கப்பட்டது. 

    மேலும் இதில் வெற்றி பெற்ற குளூர், 46 புதூர் ஊராட்சி மகளிர்குழுவினர் வருகின்ற 4&ந் தேதி ஈரோடு மகளிர் திட்ட வளாகத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிராக உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு சாகுபடி செய்யலாம் என மேலாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    நெல் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிராக உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு சாகுபடி செய்யலாம் என மேலாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையம் கிராமத்தில் மயில்சாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் தரிசு நிலத்தில் உளுந்து வம்பன் 8 என்ற ரகம் 1 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த விவசாயிக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.   

    மேலும் குறைந்த வயதுடைய பயறு வகை சாகுபடி செய்வதால் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம்.

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயறுவகை சாகுபடியை முனைப்போடு செய்ய வேளாண்மைத்துறை அனைத்து தொழில்நுட்ப மேலாண்மை விவரங் களையும் விவசாய மக்களுக்கு தெரிவிப்பதுடன், அவர்களை ஊக்கப்படுத்தவும் மாவட் டத்திலுள்ள அனைத்து களப்பணி யாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கீழ்பவானி பாசனத் திட்டத்தில் 2-ம் போக சாகுபடியில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது அறுவடை பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
     
    மேலும் ஈரோடு மாவட்டத்தின் சராசரி மழை அளவு 702.4 மி.மீ கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மூலம் இயல்பான மழை அளவைவிட கூடுதலாக 284.9 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.இதன் மூலம் மாவட்டத்தின் பெரும்பான்மையான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது.

    இதனை பயன்படுத்தி தற்போது நெல் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிராக உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு சாகுபடி செய்ய 3700 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வட்டாரங்க ளிலும் வேளாண்மைத்துறை பல்கலைக்கழக விஞ்ஞனிகள், மகளிர் திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவற்றுடன் இணைத்து அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும் பயறுவகை சாகுபடி செய்திட விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பயறுவகை சாகுபடிக்கு மிக குறைந்த நீரே போதுமானது. ஏக்கருக்கு 300-400 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. பயறு வகை சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் செறிவூட்டப்படுவதோடு, கால்நடைகளுக்கு தீவனமாகவும் இச்செடிகள் பயன்படுகிறது.

    பயறுவகை சாகுபடிக்கு தேவையான உயர் விளைச்சல் ரகங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் வேளாண்மைத்துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 பின்னங்கால்களும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த 5 வயது ஆண் சிறுத்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான மான், சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடக்க முடியாத நிலையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதாக கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பவானிசாகர் வனத்துறை கால்நடை டாக்டர்.சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு சென்று அந்த சிறுத்தையை கண்டுப்பிடித்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் சிறுத்தையை கூண்டில் ஏற்றி பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன உயிரின ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பின்னங்கால்களும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த 5 வயது ஆண் சிறுத்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    அந்த சிறுத்தைக்கு மாட்டு இறைச்சி, ஈரல், ஆட்டு இறைச்சி, கோழி ஆகியவை உணவாக கொடுக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி மூலம் மருந்துகள் செலுத்திப்படுகிறது.

    சிறுத்தை குணமாகி எழுந்து கால்களை ஊன்றி நடமாடும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்.சதாசிவம் தெரிவித்தார். மருத்துவ உதவியாளர்கள் வீரக்குமார், செந்தில்குமார், கேசவராஜ் ஆகியோர் உடனிருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்ப பணியில் இருந்த போலீஸ்காரர்கள் லாரியை நிறுத்தி ஜீப்பில் இருந்து கொண்டே லாரி டிரைவரை அழைத்தனர்.

    பின்னர் லாரி டிரைவரிடம் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு லஞ்சம் கேட்டனர். அப்போது அந்த லாரி டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறி பர்சை திறந்து காட்டினார். அப்போது பர்சில் 50 ரூபாய் இருந்தது. அதை லாரி டிரைவர் போலீசாரிடம் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

    ஆனால் போலீசார் 50 ரூபாயை வாங்க மறுத்து சிறிய வாகனங்களே 100 ரூபாய் கொடுக்கும்போது நீ 50 ரூபாய் கொடுத்தால் எப்படி? 200 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.

    அதற்கு பதில் அளித்த லாரி டிரைவர் தினமும் 50 ரூபாய் கொடுத்துவிட்டு தான் செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள். என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா? என்றார். தொடர்ந்து பேசிய போலீசார் சரி 200 ரூபாய் தரவில்லை என்றால் பரவாயில்லை. 100 ரூபாய் கொடு என்று கூறினர். இதையடுத்து லாரி டிரைவர் பணத்தை கொடுத்துவிட்டு போலீசாருக்கு சாபம் விட்டபடி சென்றார்.

    லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாளது.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் செல்லக்குமார். பங்களாபுதூர் போலீஸ்காரர் கந்தசாமி என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 2 பேரும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது. 
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். சாம்பல் புதன் தினத்தில் இந்த நோன்பு தினம் தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு நோன்பு தினம் இன்று தொடங்கியது.
    ஈரோடு:


    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். சாம்பல் புதன் தினத்தில் இந்த நோன்பு தினம் தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு நோன்பு தினம் இன்று  தொடங்கியது.

    இதையொட்டி இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சாம்பல் (விபூதி) புதன் சிறப்பு வழிபாடுகள்  இன்று காலை நடந்தது. இந்த பூஜையின் போது கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்து ஓலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு சாம்பலாக வைக்கப்பட்டு, அது புனிதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் திருப்பலி நிறைவேற்றினார். 

    இதைத் தொடர்ந்து இன்று  மாலை 6.30 மணிக்கும் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த வழிபாடுகளின் போது பக்தர்களின் நெற்றியில் பங்கு தந்தையர்கள் விபூதி பூசி விடுவார்கள்.

    தொடர்ந்து தினசரி தவக்கால நிகழ்வுகள் நடக்கின்றன. வெள்ளிக் கிழமைகளில் காலை 6 மணி, பகல் 11.30 மணி, மாலை 6 மணி என 3 நேரங்கள் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தியானித்து இந்த வழிபாடு நடக்கிறது.

    ஏப்ரல் மாதம் 2-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பாரதி நகர் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புனித அமல அன்னை ஆலயம் வரை பாத யாத்திரை யுடன் கூடிய சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. ஏப்ரல் 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும் அதைத்தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    ஏப்ரல் 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு குருத்தோலைகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு செய்கிறார்கள். ஏப்ரல் 14-ந் தேதி பெரிய வியாழன் வழிபாடு நடக்கிறது. 

    அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியின்போது பாதம் கழுவி முத்தமிடும் சடங்கும், நற்கருணை இடமாற்றும் நிகழ்வும் நடக்கிறது. 

    தொடர்ந்து நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது. ஏப்ரல் 15-ந் தேதி காலை 6 மணி முதல் அமைதி ஆராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு பெரிய சிலுவைப்பாதை புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு இறை இரக்க ஜெபமாலையும், அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருச்சிலுவை திருச் சடங்குகள் நடக்கின்றன.

    ஏப்ரல் 16-ந் தேதி இரவு 10 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடுகளும் அதைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த, ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி வழிபாடும் நடக்கிறது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஆகியோரி ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.
    சிவகிரி அருகே ஆட்டு கொட்டகையில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சிவகிரி அருகே ஆட்டு  கொட்டகையில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாவாயம்மாள் (வயது 77). தனது மகள் மல்லிகா தேவியுடன் வசித்து வந்தார். கடந்த 5 வருடமாக பாவாயம்மாள் வயது முதிர்வு காரணமாக பல்வேறு வியாதிகளால் அவதி அடைந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மல்லிகாதேவி வீட்டில் பார்த்த போது தாய் பாவாயம்மாள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் சென்று பார்த்தபோது பாவாயம்மாள் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிவகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி செல்லியாண்டியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்தி கடன் செலுத்தினர்.
    பவானி:

    பவானி செல்லியாண்டியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்தி கடன் செலுத்தினர்.


    பவானி கூடுதுறை அருகே செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லை யம்மன்  கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு  புனித நீராட்டு விழா நடந்தது. நேற்று மதியம் மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை புது பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து  சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் குதிரையுடன் அம்மனை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டு வந்தனர். மேலும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் உடலில் சேறு பூசி கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் மிளகு, உப்பு, காய்கறிகள் மற்றும் கனி வகைகளை சூறை விட்டனர்.  இதை பொதுமக்கள் பலர் போட்டி போட்டு கொண்டு எடுத்தனர்.

    இதில் இளைஞர்கள் பலர் சாமி வேடம் அணிந்தும் உடலில் வண்ணங்கள் தீட்டி கொண்டும் வந்தனர். சிறுவர்கள் உடலில் சேறு பூசி வேப்பிலையுடன் ஆடி கொண்டு வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் பழ வகை கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று மதியம் பொங்கல் விழா நடந்தது. இதில் பெண்கள் பலர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று இரவு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்து வழி படுகிறார்கள்.

    நாளை காலை 9 மணிக்கு தேரோட்டம்,  கம்பம் எடுத்து ஆற்றில் விடும் விழாவும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு பரிவேட்டை, 5-ந் தேதி இரவு   தெப்ப உற்சவம், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
    ஈரோடு மாவட்டத்தில் கா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய இசை கச்சேரி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஈரோடு:


    ஈரோடு மாவட்டத்தில் கா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில்  விடிய, விடிய இசை கச்சேரி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மகா சிவராத்தியை யொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை யாக பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல் கால பூஜையும் தொடர்ந்து 4 கால பூஜைகள்  நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில் திடலில் மேடை அமைத்து சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு முதல் விடிய, விடிய இன்று அதிகாலை வரை மகா சிவ ராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

     இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர். தொடர்ந்து அங்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதையடுத்து பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் விடிய, விடிய நடத்தப் பட்டது.

    கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேசுவரர் கோவி லில் மகா சிவராத்திரியை யொட்டி  இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது . தொடர்ந்து 10 மணி, நள்ளிரவு 2 மணி, மற்றும் இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

    இதேபோல் ஊஞ்சலூரில் காவிரி ஆற்றங்கரையில் ராகு, கேது தலம் என அழைக்கப்படும் மிகவும் பழமையான   நாகேஸ்வர சுவாமி  கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இரவு முதல் அதிகாலை வரை பூஜைகள் நடைபெற்றது.

    கொந்தளம்  நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

    கொடுமுடி அருகே பாசூர் காவிரிக்கரை சங்கிலிக்கருப்பண்ண  சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக சிறுவர் சிறுமியர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பக்தர் கள் விடிய, விடிய விழித்திருந்து சிவராத்திரியை கொண்டாடினர். இதற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

     முன்னதாக இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம்  தேன், கரும்புச்சாறு,, பன்னீர், சந்தனம், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதைத்தொடர்ந்து அலங் கார பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து 4 கால பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுகு சர்க்கரை பொங்கல், சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் கோபி செட்டி பாளையம் அடுத்த பச்சைமலை சுப்பிரமணிசாமி கோவில் வளாகத்தில் உள் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிவகிரி தர்ம ரட்சண சமிதியில் 1008 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொழிலில் நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    தொழிலில் நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (33). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று வீட்டில் வாந்தி எடுத்து கொண்டி ருந்தார். இதுகுறித்து விசாரித்த போது தான் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். 

    உடனடியாக உறவி னர்கள் மகேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தபாடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
    பவானி அருகே மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானி அருகே மலையில் ஏற்பட்ட தீ  விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அடுத்த ஊராட்சி கோட்டையில் வேதகிரி மலை உள்ளது. இந்த மலையில் வேதகிரீஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் மற்றும் வரதராஜ பெரு மாள் கோவில் உள் ளது.

    இந்த மலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மலையின் நடுப்பகுதியில் திடீரென தீப் பிடித்து எரிய தொடங்கியது. ஏற்கனவே மலைப்பகுதியில் வெயில் காரணமாக புற்கள் மற்றும் மரங்கள் காய்ந்து கிடந்தது. 

    இதனால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இலை தலைகளை எடுத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் பக்தர்களால் கீழே இறங்க முடியாமல் தவித் தனர்.

    இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் மலைப் பகுதியில் வாகனம் செல்ல முடியாததால் தீயணைப்பு வாகனத்தை மலை அடி வாரத்தில் நிறுத்தி விட்டு படிகள் வழியாக சென்றனர்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் போராடி சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் பாதுகாப்பாக மலையில் இருந்து அடிவார பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதில் மலைப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் மற்றும் பல்வேறு மரங்களும் தீயில் எரிந்து சேதமானது.  தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சரியான நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்து எப்படி? நடந்தது. எனபது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகிரி பழப்பூசைய்யன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.
    சிவகிரி:

    சிவகிரி பழப்பூசைய்யன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.


    சிவகிரி அருகே மாரப்பன்பாளையம் பழப்பூசைய்யன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பழப்பூசைய்யன் சிறப்பு அலங்காரத்திதல் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் ஏலம் விடப்பட்டது. இதனை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதில் ஈரோட்டை சேர்ந்த தர்ம லிங்கம் பரமேஸ்வரி என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு எலுமிச்சைப்பழத்தை ஏலம் எடுத்தனர்.

    பின்னர் அன்னதான த்துக்கு பயன்படுத்தப்பட்டு மீதம் இருந்த 1 கிலோ உப்பை மாரப்பம்பாளையத்தை சேர்ந்த முருகன் மல்லிகா என்ற பக்தர் ரூ.7500-க்கு  ஏலம் எடுத்து சென்றனர். மேலும் 1 கிலோ சர்க்கரையை பாரப்பா பாளையத்தை சேர்ந்த சரவணன் முத்துலட்சுமி என்ற பக்தர் ரூ.7500-க்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    மேலும் பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளிக்காசு, அரிசி மூட்டை போன்ற பொருட் களையும் பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கூறி எடுத்து சென்றனர்.

    கவுந்தப்பாடி ஆற்றுப்பாலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:


    கவுந்தப்பாடி ஆற்றுப்பாலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் தண்ணீர் பந்தல்பாளையம் தங்கமேடு மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாறன். இவரது மனைவி மரகதம். இவர்களது மகன் ஆனந்த குமார் (27). தொழிலாளி.

    ஆனந்தகுமாருக்கும், தங்கமணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன் -மனைவி இருவரும் மணியகாரன் பாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 
    தங்கமணி அயலூரில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன்&மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு  கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலம் ஆற்றுப்பாலத்திற்கும் மேற்கு புறத்தில் கோவிந் தராஜ் தோட்டத்திற்கு அருகே ஆற்றங்கரையில் ஆனந்தகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    இதுகுறித்து கவுந்தபாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமார் எதற்காக இறந்தார் என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் மரகதத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மரகதம் தனது குடும்பத்தாருடன் கவுந்தபாடி அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் ஆனந்தகுமார் பெற்றோர் தங்களது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×