என் மலர்
ஈரோடு
மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி:
மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி அருகே பாசூர் வேங்கியாம் பாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ் (23) இவர் சம்பவத்தன்று இரவு பாசூரில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
சாஸ்த்திரி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூரை சேர்ந்தவர் சக்திவேல் (32) இவர் தன் மனைவி சசிகலாவை (29) மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து மொடக்குறிச்சி அருகே உள்ள காகம் என்ற கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி சக்திவேல் எதிரே வந்த கமலேஷ் மோட்டார் சைக்கிளில் மீது மோதினார்.
இதில் கீழே விழுந்த கமலேஷ்க்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சசிகலா மற்றும் சக்திவேலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கமலேஷ் இறந்து விட்டார் என கூறினர்.
மேலும் சக்திவேல், சசிகலா 2 பேரும் மேல் சிகிச்சைகக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் சசிகலாக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர், தி.மு.க. கவுன்சிலர் 3 பேர் என மொத்தம் 5 பேர் தாமதமாக 10.20 மணிக்கு வந்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதில் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை மறைமுக தேர்தலில் பங்கேற்ற 9 கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர், தி.மு.க. கவுன்சிலர் 3 பேர் என மொத்தம் 5 பேர் தாமதமாக 10.20 மணிக்கு வந்தனர். அவர்களை மன்ற கூடத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலத்தில் பேரம் பேசி லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் லாரியை நிறுத்தி ஜீப்பில் இருந்து கொண்டே லாரி டிரைவரை அழைத்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி கொண்டு லஞ்சம் கேட்டனர்.
அப்போது அந்த லாரி டிரைவர் தன்னிடம் ரூ.50 தான் உள்ளது. அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த டிரைவர் கூறினார். ஆனால் போலீசார் 50 ரூபாய் வாங்க மறுத்து 200 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள் இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
அதற்கு பதிலளித்த டிரைவர் தினமும் 50 ரூபாய் கொடுத்துவிட்டு தான் செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள். என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா என்றார். இதனை தொடர்ந்து போலீசார் 100 ரூபாய் கொடு என்று கூறினர்.
இதையடுத்து லாரி டிரைவர் பணத்தை கொடுத்து விட்டு சென்றார். லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் செல்லகுமார், பங்களாபுதூர் போலீஸ்காரர் கந்தசாமி என தெரியவந்தது.
அவர்கள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்நிலையில் அந்த 2 போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்கொண்டார். அதன்படி அந்த 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் லாரியை நிறுத்தி ஜீப்பில் இருந்து கொண்டே லாரி டிரைவரை அழைத்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி கொண்டு லஞ்சம் கேட்டனர்.
அப்போது அந்த லாரி டிரைவர் தன்னிடம் ரூ.50 தான் உள்ளது. அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த டிரைவர் கூறினார். ஆனால் போலீசார் 50 ரூபாய் வாங்க மறுத்து 200 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள் இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
அதற்கு பதிலளித்த டிரைவர் தினமும் 50 ரூபாய் கொடுத்துவிட்டு தான் செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள். என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா என்றார். இதனை தொடர்ந்து போலீசார் 100 ரூபாய் கொடு என்று கூறினர்.
இதையடுத்து லாரி டிரைவர் பணத்தை கொடுத்து விட்டு சென்றார். லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் செல்லகுமார், பங்களாபுதூர் போலீஸ்காரர் கந்தசாமி என தெரியவந்தது.
அவர்கள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்நிலையில் அந்த 2 போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்கொண்டார். அதன்படி அந்த 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
வெளிமாநில வியாபாரிகள் வருகையால் கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
வெளிமாநில வியாபாரிகள் வருகையால் கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
கடந்த சில வாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் வியாபாரம் சுமாராகவே இருந்து வந்தது. தற்போது தேர்தல் முடிந்து பழைய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் சூடு பிடித்தது.
இதேபோல் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்தனர்.
இன்று 450 பசுமாடுகள், 250 எருமை மாடுகள், 50 கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகமாக வந்திருந்தது.
இன்று 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. பசுமாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் 3 நகராட்சி, 34 பேரூராட்சி மன்ற தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,:
ஈரோடு மாவட்டத்தில் 3 நகராட்சி, 34 பேரூராட்சி மன்ற தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் விபரம் வருமாறு:-
பவானி-சிந்தூரி, சத்தியமங்கலம்-ஜானகி ராமசாமி, புளியம்பட்டி -ஜனார்த்தனன்
ஆப்பக்கூடல்-ரேவதி, பவானிசாகர்-மோகன், கூகலூர்-ஜெயலட்சுமி, நம்பியூர்-செந்தில்குமார், பெரிய கொடிவேரி- தமிழ்மகன் சிவா, வாணிப்புத்தூர்-சிவராஜ், அரியப்பம் பாளையம்- மகேஸ்வரி, அத்தாணி -புனிதவள்ளி, ஜம்பை-ஆனந்தகுமார், காசி பாளையம்-தமிழ்ச்செல்வி, கொளப்பலூர்-அன்பரசு, நெரிஞ்சிப்பேட்டை -கண்ணன், பி.மேட்டுப் பாளையம்-தனலட்சுமி, சலங்கப் பாளையம்- மணிமேகலை, எலத்தூர் -நளினா பழனிச்சாமி, கெம்பநாயக்கன் பாளையம்- ரவிச்சந்திரன், ஒலகடம்-ஜெயக்கொடி, பெருந்துறை-ராஜேந்திரன், கருமாண்டி செல்லி பாளையம்-செல்வன், சித்தோடு-தனலட்சுமி, கொடுமுடி-திலகவதி, சிவகிரி-பிரதீபா, அவல்பூந்துறை-ராதாமணி, காஞ்சிக்கோவில்-திவ்யா, கொல்லாங்கோயில்-சந்திரசேகர், மொடக்குறிச்சி- செல்வம்பாள், நல்லாம்பட்டி- பாக்கியலட்சுமி, நசியனூர்-மோகனப்பிரியா, பள்ளப்பாளையம்- கோகிலா, பாசூர்-பழனி யம்மாள், வெள்ளோட்டம் பரப்பு-சத்தியா, அரச்சலூர்-விஜயக்குமார், கிளாம்பாடி-அமுதா, ஊஞ்சலூர்-சசிகலா.
விடுபட்ட வேட்பாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்பட்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருவிழா சிறப்பாக நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா எளிமையாக நடந்தது.
ஈரோடு:
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவின்போது ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படும். அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள்.
பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருவிழா சிறப்பாக நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா எளிமையாக நடந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து இருப்பதால் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான குண்டம் தேர்த்திருவிழா வருகிற 15-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
அதன்பிறகு ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பெண்கள் தினமும் மாரியம்மனுக்கு புனித நீர் எடுத்து வந்து வழிபட்டு செல்வார்கள்.
இதனைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 10 மணிக்கு கம்பம் நடும் விழாவும் நடைபெறுகிறது.
23-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடக்கிறது. 24-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றப்படுகிறது. 29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது.
இதில் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறை வேற்ற உள்ளனர். அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
30-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது.
வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரை வாய்க்கால் மாரியம்மன் வீதி உலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஈரோடு மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது.
விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
பவானி:
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
பவானி கூடுதுறை அருகே செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.
விழாவையொட்டி கடந்த மாதம் 28-ந் தேதி அம்மனு க்கு புனித நீராட்டு விழா நடந்தது. நேற்று முன்தினம் மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை பவானி புது பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் குதிரையுடன் அம்மன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
மேலும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் உடலில் சேறு பூசி கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் மிளகு, உப்பு, காய்கறிகள் மற்றும் கனி வகைகளை சூறை விட்டனர். இதை பொதுமக்கள் பலர் போட்டி போட்டு கொண்டு எடுத்தனர்.
இதில் இளைஞர்கள் பலர் சாமி வேடம் அணிந்தும், உடலில் வண்ணங்கள் தீட்டி கொண்டும் வந்தனர். சிறுவர்கள் உடலில் சேறு பூசி வேப்பிலையுடன் ஆடி கொண்டு வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் பழ வகை கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மதியம் பொங்கல் விழா நடந்தது. இதில் பெண்கள் பலர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்து வழிப்பட்டனர்.
இதனையடுத்து இன்று காலை திருகல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செல்லியாண்டி அம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரில் ஏற்றப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தொடர்ந்து கம்பம் எடுத்து ஆற்றில் விடும் விழாவும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நாளை இரவு பரிவேட்டையும், 5-ந் தேதி இரவு தெப்ப உற்சவம், 6&ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர்கள் உடல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர்கள் உடல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி ரெயில்வே பாலம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சம்பவத்தன்று 2 முதியவர்கள் உடல் மிதந்து கொண்டு இருப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் போன்ற விவரம் தெரியவில்லை.
ஒருவர் கருப்பு கலரில் பேண்ட் அணிந்திருந்தார். மற்றொருவர் வெள்ளை கலரில் கோடு போட்ட சட்டை பழுப்பு கலரில் கோடு போட்ட அரைக்கால் சட்டை அணிந்து இருந்தார்.
2 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வாய்காலில் தவறி விழுந்து இறந்தார்களா? என்பது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி அருகே டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி அருகே நாகப்பாளையம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (70).
இவர் இன்று காலை ஒத்தக்கடையில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் வேகத்தடை அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி பொன்னுச்சாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்னுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடுமுடி இன்ஸ் பெக்டர் முருகன் இறந்த பொன்னுச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற டிப்பர் லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் இருந்து, மாணவி மவுனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர்.
அந்தியூர்:
உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் இருந்து, மாணவி மவுனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர்.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் உள்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், இந்தியா உள் ளிட்ட பல்வேறு நாடுகளி லிருந்து படிக்கச் சென்ற மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் லிவிவ் என்ற பகுதியில் மருத்துவம் படிக்கச் சென்ற ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜா- குணவதி தம்பதியரின் மகள் மவுனி சுகிதா மற்றும் அவருடன் படிக்கும் மருத்துவ மாணவ மாணவியர்கள், தமிழகத்திற்கு அழைத்து வர தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மாணவ, மாணவிகளுடன் இணையவழியில் உரையாடி தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் இருந்து, மாணவி மவுனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர்.
நேற்று இரவுரவு கோவை வந்த மருத்துவ மாணவி மவுனி சுகிதா, நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்தடைந்தார். அவரை பெற்றோர் கண்ணீர் மல்க ஆரவாரத் துட ன் வரவேற் றனர்.
இது குறித்து மாணவி மவுனி சுகிதா கூறுகையில்:-
நான் உக்ரைன் நாட்டில் உள்ள லிவிங் பகுதியில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வருகிறேன். என்னுடன் சேர்த்து மொத்தம் 24 பேர் தமிழகத்தில் இருந்து படிக்கச் சென்றோம்.
ரஷ்யாவுக்கும் உக்ரை னுக்கும் இடையே திடீர் போர் அறிவிக்கப் பட்டதால், அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டோம்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், முதல்- அமைச்சர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தார்.
மேலும் அயல்நாடு வாழ் தமிழர் மற்றும் மறுவாழ்வு ஆணையாளரிடம், அவ்வப் போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அவரும் விரைவில் தமிழ்நாடு அழைத்துச் செல்வதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் தைரியம் கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், 4 நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும், 42 பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் களுக்கான மறைமுக தேர்தலும் நாளை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், 4 நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும், 42 பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் களுக்கான மறைமுக தேர்தலும் நாளை நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், மற்றும் 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில் 2 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அந்த 2 வார்டுகளில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் 790 வார்டுகளில் கவுன்சிலர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், 4 நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும், 42 பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் களுக்கான மறைமுக தேர்தலும் நாளை நடைபெறுகிறது.
இதற்காக மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு 30 பெண்கள் உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் இந்த முறை மேயர் பதவியை பெண் வகிக்க போகிறார். ஈரோடு மாநகராட்சி தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.
மாநகராட்சியில் 43 வார்டுகளில் நேரடியாக தி.மு.க வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் தான் மேயர் பதவி வகிக்க போவது உறுதியாகி விட்டது.
மேயர் பதவிக்கு 4 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே ஈரோடு மேயர் பதவிக்கு போட்டியிடும் பட்டியல் அமைச்சர் முத்துசாமி மூலம் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் துணை மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பலரது பெயர்களும் அடிபடுகிறது. ஆனால் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு துணை மேயர் பதவி வழங்கப்படுமா? என எதிர் பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. உறுப்பி னர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் உறுப் பினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு பேனா, பென்சில், செல்போன் கூட்ட அரங்கிற்கு கொண்டு வர தடை விதிக்கப் பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மாநகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவல ருமான சிவக்குமாரிடம் மனு தாக்கல் செய்வார்கள். அதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தால் மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
இதில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று மேயரை மறைமுகமாக தேர்ந்தெடுப்பார்கள். இதில் பெரும்பாலான ஓட்டு பெறுபவர்கள் மேயராக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதேபோல் துணை மேயர் மறைமுகத்தேர்தல் மதியம் நடைபெறும்.
இதேபோல் 4 நகராட்சி தலைவருக்கான தேர்தல் நாளை காலை நடைபெறும், மதியம் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறும். இதேபோல 42 பேரூராட்சிகளில் தலைவருக்கான தேர்தல் காலை நடைபெறும். மதியம் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.
தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், வரத்து இருந்தும் விலை சரிந்து காணப்படுகிறது.
ஈரோடு:
தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், வரத்து இருந்தும் விலை சரிந்து காணப்படுகிறது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடியாகிறது. டிசம்பர், முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை அறுவடை சீசனாகும்.
மரவள்ளி கிழங்கை மொத்தமாக சேகோ ஆலைகள் வாங்கி செல்வது வாடிக்கை. தற்போது அறுவடை முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், வரத்து இருந்தும் விலை சரிந்து காணப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-
கடந்த நவம்பர், மாதம் ஒரு டன் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. மரவள்ளி பாயிண்ட் ரூ.300 என்ற விலையில் விற்பனையானது.
கொரோ னாவுக்கான ஊரடங்கு கட்டுப்பாடு வந்ததும் விலை குறைந்து தற்போது ஒரு டன் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. பாயிண்ட் ரூ.225 என்ற விலையில் கேட்கின்றனர்.
அதற்கேற்ப 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,800 வரை விற்பனையாகிறது. ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.2,400 முதல் ரூ.2,700 வரை விற்பனையாகிறது.
மரவள்ளிக்கும், அதனை சார்ந்த உபபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதனை மாற்ற, மரவள்ளி, அதனை சார்ந்த உபபொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஸ்டார்ச் மாவுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி-ஐ 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். ஜி.எஸ்.டி. அதிகமாக உள்ளதால், ஜவுளி சார்ந்த பல தொழில் செய்வோர் ஸ்டார்ச் மாவு வாங்க தயங்குகின்றனர்.
கடந்த காலங்கள் போல ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






