என் மலர்
உள்ளூர் செய்திகள்

புஞ்சை புளியம்பட்டி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் இசை கச்சேரி, பரத நாட்டிய நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் கா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய இசை கச்சேரி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய இசை கச்சேரி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மகா சிவராத்தியை யொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை யாக பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல் கால பூஜையும் தொடர்ந்து 4 கால பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில் திடலில் மேடை அமைத்து சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு முதல் விடிய, விடிய இன்று அதிகாலை வரை மகா சிவ ராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர். தொடர்ந்து அங்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதையடுத்து பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் விடிய, விடிய நடத்தப் பட்டது.
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேசுவரர் கோவி லில் மகா சிவராத்திரியை யொட்டி இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது . தொடர்ந்து 10 மணி, நள்ளிரவு 2 மணி, மற்றும் இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் ஊஞ்சலூரில் காவிரி ஆற்றங்கரையில் ராகு, கேது தலம் என அழைக்கப்படும் மிகவும் பழமையான நாகேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இரவு முதல் அதிகாலை வரை பூஜைகள் நடைபெற்றது.
கொந்தளம் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
கொடுமுடி அருகே பாசூர் காவிரிக்கரை சங்கிலிக்கருப்பண்ண சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக சிறுவர் சிறுமியர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பக்தர் கள் விடிய, விடிய விழித்திருந்து சிவராத்திரியை கொண்டாடினர். இதற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
முன்னதாக இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் தேன், கரும்புச்சாறு,, பன்னீர், சந்தனம், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதைத்தொடர்ந்து அலங் கார பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து 4 கால பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுகு சர்க்கரை பொங்கல், சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கோபி செட்டி பாளையம் அடுத்த பச்சைமலை சுப்பிரமணிசாமி கோவில் வளாகத்தில் உள் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிவகிரி தர்ம ரட்சண சமிதியில் 1008 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






