என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலையில் தீ கொழுந்து விட்டு எரிந்த காட்சி.
பவானி அருகே மலையில் தீ விபத்து
பவானி அருகே மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி அடுத்த ஊராட்சி கோட்டையில் வேதகிரி மலை உள்ளது. இந்த மலையில் வேதகிரீஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் மற்றும் வரதராஜ பெரு மாள் கோவில் உள் ளது.
இந்த மலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மலையின் நடுப்பகுதியில் திடீரென தீப் பிடித்து எரிய தொடங்கியது. ஏற்கனவே மலைப்பகுதியில் வெயில் காரணமாக புற்கள் மற்றும் மரங்கள் காய்ந்து கிடந்தது.
இதனால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இலை தலைகளை எடுத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் பக்தர்களால் கீழே இறங்க முடியாமல் தவித் தனர்.
இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் மலைப் பகுதியில் வாகனம் செல்ல முடியாததால் தீயணைப்பு வாகனத்தை மலை அடி வாரத்தில் நிறுத்தி விட்டு படிகள் வழியாக சென்றனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் போராடி சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் பாதுகாப்பாக மலையில் இருந்து அடிவார பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில் மலைப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் மற்றும் பல்வேறு மரங்களும் தீயில் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சரியான நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்து எப்படி? நடந்தது. எனபது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






