என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
சிவகிரி அருகே ஆட்டு கொட்டகையில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சிவகிரி அருகே ஆட்டு கொட்டகையில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாவாயம்மாள் (வயது 77). தனது மகள் மல்லிகா தேவியுடன் வசித்து வந்தார். கடந்த 5 வருடமாக பாவாயம்மாள் வயது முதிர்வு காரணமாக பல்வேறு வியாதிகளால் அவதி அடைந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மல்லிகாதேவி வீட்டில் பார்த்த போது தாய் பாவாயம்மாள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் சென்று பார்த்தபோது பாவாயம்மாள் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிவகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






