என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜீப்பில் அமர்ந்து கொண்டு லாரி டிரைவரிடம் பேரம் பேசிய போலீஸ்காரர்கள்
சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய போலீஸ்காரர்கள்
சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்ப பணியில் இருந்த போலீஸ்காரர்கள் லாரியை நிறுத்தி ஜீப்பில் இருந்து கொண்டே லாரி டிரைவரை அழைத்தனர்.
பின்னர் லாரி டிரைவரிடம் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு லஞ்சம் கேட்டனர். அப்போது அந்த லாரி டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறி பர்சை திறந்து காட்டினார். அப்போது பர்சில் 50 ரூபாய் இருந்தது. அதை லாரி டிரைவர் போலீசாரிடம் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
ஆனால் போலீசார் 50 ரூபாயை வாங்க மறுத்து சிறிய வாகனங்களே 100 ரூபாய் கொடுக்கும்போது நீ 50 ரூபாய் கொடுத்தால் எப்படி? 200 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
அதற்கு பதில் அளித்த லாரி டிரைவர் தினமும் 50 ரூபாய் கொடுத்துவிட்டு தான் செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள். என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா? என்றார். தொடர்ந்து பேசிய போலீசார் சரி 200 ரூபாய் தரவில்லை என்றால் பரவாயில்லை. 100 ரூபாய் கொடு என்று கூறினர். இதையடுத்து லாரி டிரைவர் பணத்தை கொடுத்துவிட்டு போலீசாருக்கு சாபம் விட்டபடி சென்றார்.
லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாளது.
இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் செல்லக்குமார். பங்களாபுதூர் போலீஸ்காரர் கந்தசாமி என்பது தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
Next Story






