என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 7 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதில் மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
குறிப்பாக சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 7 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், சிக்கரசம்பாளையம், ராமபையனூர், ராஜன்நகர், பண்ணாரி, திம்பம் மலைப்பகுதி, பவானிசாகர், தொட்டம்பாளையம் போன்ற பகுதிகளில் இரவு 7 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் தான் மின்சாரம் வந்தது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கியது.
இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னகவுண்டர் என்பவர் தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 3 ஆயிரம் தேன் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
இதுகுறித்து விவசாயி சின்ன கவுண்டர் கூறும்போது, ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்து இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் பயிர் செய்வதற்காக வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், கடும் இழப்பீட்டை சந்தித்து உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
அம்மாபேட்டை பகுதியில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், தென்னை மரங்கள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நேற்று இரவு கொடிவேரி, பவானிசாகர் அம்மாபேட்டை, கோபி, தாளவாடி, நம்பியூர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
கொடிவேரி-54.2, சத்தியமங்கலம்-45, பவானிசாகர்-39.4, அம்மாபேட்டை-25, கோபி-21, தாளவாடி-16.4, நம்பியூர்-13, குண்டேரிபள்ளம்-2.2, பவானி-1.4.

சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அபிஷேக பொருட்கள் வழங்க அனுமதி இல்ைல என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அபிஷேக பொருட்கள் வழங்க அனுமதி இல்ைல என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.
சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், மூலவர் திருமேனி பாதுகாப்பையொட்டி, தினமும் ஆறு கால பூஜைகளில் மட்டும் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் செய்யப்படு கிறது.
மற்ற நேரங்களில் உற்சவ மூர்த்திக்குதான் அபிஷேகம் நடக்கிறது. பூஜை நேரம் அறிவிக்கப்பட்டு நடை முறையில் உள்ளது. ஆறு கால பூஜையில் காலை விளா பூஜை காலை, 6.40 மணிக்கும், காலசாந்தி, 7:40 மணிக்கும், உச்சிகால பூஜை, 11:40 மணிக்கும், சாயரட்சை 4:40 மணிக்கும், ராக்கால பூஜை, 6:40 மணிக்கும், அர்த்தசாம பூஜை, இரவு, 7:40 மணிக்கும் நடக்கிறது. தற்போது இது நடை முறையில் உள்ளது.
இந்த ஆறு கால பூஜை நேரத்தில் பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர், இளநீர், உட்பட அபிேஷகப் பொருட்களில் மூலவருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு வந்தது. பக்தர்கள் பால், தயிர் உட்பட அபிஷேக பொருட்கள் எந்த நேரத்தில் கொண்டு வந்தாலும் அபிேஷகம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வரு கிறார்கள்.
பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிக அளவில் பால், தீர்த்தங்கள் கொண்டு வந்து மூலவருக்கு அபிேஷகம் செய்து வருகிறார்கள். இதனால், மூலவர் திருமேனி பாதிக்கப்படுகிறது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து இரு தரப்பினரும் அமைச்சர் முத்துசாமியிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் நேரில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமி இரு தரப்பினர் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்டடார். மேலும், திருக்கோவில் இணை ஆணையரின் கருத்தும் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக கால பூஜை நேரத்தில் கால பூஜை அளவின் படி பால், தயிர், பஞ்சாமிரதம் என அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு அதில் மட்டும் மூலவருக்கு அபிேஷகம் செய்ய வேண்டும். திருக்கோவில் சார்பாக தரும் மாலை மட்டும் மூலவருக்கு அணிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி மேல் பக்தர்கள் கொண்டு வரும் பால், பஞ்சாமிர்தம், தயிர் உட்பட அபிேஷகப் பொருட்களில் கால பூஜை நேரத்தில் கூட மூலவருக்கு அபிேஷகம் கிடையாது. உற்வருக்கு மட்டும் காலபூஜை நேரம் தவிர மற்ற நேரத்தில் செய்யப்படும்.
பக்தர்கள் கொண்டு வரும் மாலை, பூ, என அனைத்தும் மூலவர் பாதத்தில் சமர்பணம் செய்வது அல்லது உற்வருக்கு அணிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிேஷகம் செய்யப்படாது. உற்சவருக்கு மட்டும் பால் அபிேஷகம் செய்யப்படும். இதற்கு ரூ.25 என்ற பழைய கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய உத்ததரவுகள் அனைத்தும் இன்று முதல் கடைபிடிக்கப்படும். இது குறித்து திருக்கோவில் தலைமை குருக்கள், குருஸ்தானீகம் உட்பட 17 அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் 3-வது நாளாக மின்விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அம்மாபேட்டை:
சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் 3-வது நாளாக மின்விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளான கேசரிமங்கலம், குப்பிச்சிபாளையம், மேலூர், சே கண்டியூர், கல்பாவி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளை மின்சார வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் பணிகள் முழுமையாக நடைபெறாததால் 3-வது நாளாக 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் செல்போன் வெளி ச்சத்திலும், மெழுகுவத்தி வெளிச்சத்திலும், அகல் விளக்கு வெளிச்சத்திலும் பெண்கள் வீட்டு வேலைகள் உள்ளிட்ட பணிகளை சிரமத்துடன் செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது.
குறிப்பாக மொத்த வியாபாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதேநேரம் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த சில வாரமாகவே மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றம். நூல் விலை ஏற்றம் காரணமாக வியாபாரம் மந்தமாகவே நடந்தது. கடந்த வாரம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சில்லரை வியாபாரம் சுமாராக நடந்தது.
இந்த வாரம் இன்று ரம்ஜானை ஒட்டி சந்தை கூடியதுஆனால் வழக்கத்துக்கு மாறாக சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இன்று 40 சதவீதம் சில்லரை வியாபாரம் நடந்தது. ஆனால் அதேநேரம் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் வெறும் 30 சதவீதம் மட்டுமே நடந்தது.
சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைவாய்பாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது என்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 80.19 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 0.96 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து குடிநீருக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டா–டப்பட்டு வருகின்றது.
இதையடுத்து இன்று அதிகாலைலேயே இஸ்லாமியர்கள் எழுந்து குளித்து புத்தாடைகள் உடுத்தி ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர் . ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடை–பெற்றன. ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்க–ப்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பள்ளிவாசல், ரெயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பா–ளையம் பள்ளிவாசல், மற்றும் கோபி, சத்திய–மங்கலம், பவானி, பவானி–சாகர், பெருந்துறை, நம்பியூர்,– அந்தியூர், கோபி, புளியம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம் உள்பட மாவட்டம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பள்ளி–வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தமிழகமெங்கும் இன்று ரமலான் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள மஸ்திதேநூர் பள்ளிவாசலில் இருந்து பர்கூர் சாலைவழியாக அந்தியூர் பெரிய ஏரி பகுதி அருகில் உள்ள ஈதுகாமை தானத்தில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல்அமீத் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுதொழுகை செய்தனர். சுன்னத் ஜமாத் ஷானவாஸ் ஹஜ்ரத் ஜியாவுதீன் ஹஜ்ரத் கெலிவு ஸ்ரஷாதி காதர்ஹைதர் கான் முனாப் மற்றும் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குண்டுபாயுர் பகுதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொலுகைகள் நடைபெற்றது.
ரம்ஜான் பண்டி கையை யொட்டி கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
கூகலூர், சவுண்டப்பூர், கலிங்கியம், நல்ல கவுண்டன் பாளையம், கணபதி பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் இன்று காலை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதே போல் கோபிெசட்டி பாளையம் முத்துஷா வீதி, சத்தி ரோடு, வாய்க்கால் ரோடு பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் மார்க்கெட் வீதி, சத்தி ரோடு, முத்துஷா வீதி மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
பெருந்துறை முகமதியர் வீதியில் உள்ள பழைய மசூதி, ழுன்னத்தூர் ரோட்டில் உள்ள புதிய மசூதிகளில் இன்று காலை ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். பெருந்துறை, பணிக்கம் பாளையம், சிப்காட் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து ெதரிவித்து கொண்டனர்.
மேலும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுைக நடந்தது.
இதே போல் சென்னிமலை, கவுந்தப்பாடி, அத்தாணி, ஆப்பசுடல் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
கொடுமுடி அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கொடுமுடி அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (33). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோளியனூரைச் சேர்ந்த பரமசிவம் கரும்பு வெட்டும் கொத்துக்காரர் உடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கிளாம்பாடி கிராமத்தில் உள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் தங்கியிருந்து ராமலிங்கம் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்றும் கார்த்தி கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கார்த்தி வாந்தி எடுத்து மயக்கமடைந்தார்.
உடன் வேலை பார்த்துக்கொண்டி–ருந்த பிரபாத், சுரேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கார்த்திகை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி- சத்தி மெயின் ரோடு திப்பிச்செட்டி ப்பாலையம் அம்மன் கோவில் தோட்டம், பழனிச்சாமி என்பவரின் தோட்டம் அருகில் வாகன விபத்தில் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் வலதுபக்க தலை இடது தோள் பட்டையிலும் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
பிறகு அவரைப் பற்றி விசாரித்த போது ஊர் பெயர் விலாசம் தெரியவில்லை, கடந்த 4 நாட்களாக அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் உடலை கைப்பற்றி பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி நபரை பற்றி விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாளவாடி அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தாளவாடி அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி அடுத்துள்ள மெட்டல்வாடி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகள் ஜலசாக்ஷி(28). இவருக்கும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், அமிச்சவாடி என்ற பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இவர்களுக்கு கிருத்தி(6) என்ற மகள் உள்ளார். கடந்த ஓராண்டாக கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் ஜலசாக்ஷி வந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்த ஜலசாக்ஷி மற்றும் குழந்தை கிருத்தி ஆகியோர் திடீரென்று மாயமாகினர். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் தந்தை பத்மநாதன் தாளவாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
குடிபோதையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அடுத்துள்ள கணபதிபாளையம், வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்(36). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
கடந்த 1ம் தேதி மாலை வழக்கம் போல குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில் சேலையால் தூக்கிட்டுக்கொண்டார்.
இதை கண்ட மனைவி ரம்யா அருகில் இருந்தவர்களின் உதவியோடு மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மகேஸ்வரன் இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்துறை:
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியூரோ சர்ஜன், பிளாஸ்டிக் சர்ஜன், ரத்தக்குழாய் அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய பாதிப்பு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் வலியுறுத்தி கூறினார்.
மேலும் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்க–ணக்கான நோயாளிகள் வந்து பயன்பெறும் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளதால் விபத்தில் பாதிக்கப்படும் 20 முதல் 40 பேர் வரை தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியூரோ சர்ஜன் மருத்துவர் இல்லாத காரணத்தால் தலை காயத்தால் பாதிக்க–ப்ப–டு–பவர்கள் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் செல்லும் வழியி–லேயே பலர் இறந்து விடுகிறார்கள்.
மேலும் பெருந்துறை சிப்காட்டில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தீ விபத்து, தலைக்காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இங்கு பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்தக்குழாய் அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய பாதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இதனை தவிர்க்க மேற்கண்ட துறைசார்ந்த மருத்துவர்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிய மிக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் விஷமாத்திரை தின்று வடமாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஒடிசா மாநிலம் கோத்ரா மாவட்டம் தேவுளி பகுதியை சேர்ந்தவர் புட்டுரன் ஜன்தாஸ் (28). இவரது மனைவி லிப்டிமாயிபேரா (24). இவர்களது மகள் சாய்ஸ்மிரிதாஸ் (5). இவர்கள் ஈரோடு மாவட்டம் நஞ்சைஊத்துக்குளி சாவடிபாளையம் பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
புட்டுரன் ஜன்தாஸ் நேற்று மதியம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது சாப்பாடு செய்யாததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.
கணவர் கோபமாக பேசியதால் மனம் உடைந்த லிப்டிமாயிபேரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் தான் மட்டும் இறந்து விட்டால் மகள் அனாதையாகி விடுவாள் என கருதி மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து லிப்டிமாயிபேரா தனது மகள் சாய்ஸ்மிரிதாசுடன் விஷ மாத்திரை தின்று மயங்கினார். இதுபற்றி தெரிய வந்ததும் புட்டுரன் ஜன்தாஸ் வீட்டிற்கு அலறி அடித்து கொண்டு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரையும் மீட்டு மொடக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிப்டிமாயிபேரா பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது மகள் சாய்ஸ்மிரிதாஸ் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.