என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

    கொடுமுடி அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    கொடுமுடி அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (33). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோளியனூரைச் சேர்ந்த பரமசிவம் கரும்பு வெட்டும் கொத்துக்காரர் உடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கிளாம்பாடி கிராமத்தில் உள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் தங்கியிருந்து ராமலிங்கம் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்றும் கார்த்தி கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கார்த்தி வாந்தி எடுத்து மயக்கமடைந்தார்.

     உடன் வேலை பார்த்துக்கொண்டி–ருந்த பிரபாத், சுரேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கார்த்திகை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

     அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×