என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    X
    கோபிசெட்டிபாளையம் பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

    ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டா–டப்பட்டு வருகின்றது. 

    இதையடுத்து இன்று அதிகாலைலேயே இஸ்லாமியர்கள்  எழுந்து குளித்து புத்தாடைகள் உடுத்தி ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர் . ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடை–பெற்றன. ஈரோடு வ.உ.சி பூங்கா  மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்க–ப்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். 

    ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பள்ளிவாசல், ரெயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பா–ளையம் பள்ளிவாசல்,  மற்றும் கோபி, சத்திய–மங்கலம், பவானி, பவானி–சாகர், பெருந்துறை, நம்பியூர்,– அந்தியூர், கோபி, புளியம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம் உள்பட மாவட்டம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பள்ளி–வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

     தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
     
    தமிழகமெங்கும் இன்று ரமலான் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள மஸ்திதேநூர் பள்ளிவாசலில் இருந்து பர்கூர் சாலைவழியாக அந்தியூர் பெரிய ஏரி பகுதி அருகில் உள்ள ஈதுகாமை தானத்தில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல்அமீத் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுதொழுகை செய்தனர். சுன்னத் ஜமாத் ஷானவாஸ் ஹஜ்ரத் ஜியாவுதீன் ஹஜ்ரத் கெலிவு ஸ்ரஷாதி காதர்ஹைதர் கான் முனாப் மற்றும் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    இதேபோல் குண்டுபாயுர் பகுதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொலுகைகள் நடைபெற்றது.

    ரம்ஜான் பண்டி கையை யொட்டி கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. 

    கூகலூர், சவுண்டப்பூர், கலிங்கியம், நல்ல கவுண்டன் பாளையம், கணபதி பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் இன்று காலை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதே போல் கோபிெசட்டி பாளையம் முத்துஷா வீதி, சத்தி ரோடு, வாய்க்கால் ரோடு பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் மார்க்கெட் வீதி, சத்தி ரோடு, முத்துஷா வீதி மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

    பெருந்துறை முகமதியர் வீதியில் உள்ள பழைய மசூதி, ழுன்னத்தூர் ரோட்டில் உள்ள புதிய மசூதிகளில் இன்று காலை ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். பெருந்துறை, பணிக்கம் பாளையம், சிப்காட் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து ெதரிவித்து கொண்டனர்.

    மேலும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுைக நடந்தது.

    இதே போல் சென்னிமலை, கவுந்தப்பாடி, அத்தாணி, ஆப்பசுடல் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    Next Story
    ×