என் மலர்tooltip icon

    ஈரோடு

    கவுந்தப்பாடியில் விவசாயி தவறவிட்ட பணம், ஆவணங்கள் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடியில் விவசாயி தவறவிட்ட பணம், ஆவணங்கள் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார்(77). விவசாயி. இவர் கவுந்தப்பாடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் வங்கி கிளைக்கு வந்து நெல் விற்ற பணம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய்க்கான பத்திரம் மற்றும் அவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை  ஒரு கருப்பு பேக்கில் வைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

    ஆண்டிபாளையம் அருகே வந்தபோது பேக் தொலைந்து போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ேபக்கை பல்வேறு இடங்களில் தேடினார்.

    இந்நிலையில் அந்த வழியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஜான்வெஸ்லி என்பவர் வந்துகொண்டிருந்தபோது கீழே கிடந்த கருப்பு பேக்கை எடுத்து பார்த்தார்.

    அதில் பணம் ஆவணங்கள் இருந்ததை கண்டு உடனடியாக அந்த பேக்கை கவுந்தபாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பேக்கில் இருந்த ஆதார் அட்டை முகவரியை வைத்து இன்ஸ்பெக்டர் சுபாஷ் இது குறித்து சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தார். 

    உடனடியாக சிவகுமார்  போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சுபாஷ் பேக்கை திரும்ப ஒப்படைத்தார். பேக்கை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சுபாசுக்கும், பேக்கை மீட்டுக்கொடுத்த ஜான் வெஸ்சிக்கும் சிவகுமார் நன்றி தெரிவித்தார்.
    சத்தியமங்கலத்தில் இன்று காலை பாதாள சாக்கடை கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் இன்று காலை பாதாள சாக்கடை கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி 21, 22 வது வார்டில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக பாதாள சாக்கடை நீர் நேரடியாக பிள்ளையார் கோவில் வீதி வழியாக பவானி ஆற்றில் கலந்து வருகிறது.

    இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

    இந்நிலையில் 21, 22 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திடீரென சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார்  விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால பொதுமக்கள் கழிவுநீர் கலப்பதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி விரைந்து வந்தார். அவர்  மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாதாள சாக்கடை உடைப்பு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    ஈரோடு அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த திங்களூர் பெரியவீர சங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருக்காணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    செந்தில்குமார் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அருக்காணி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மூத்த மகள் கோபிகா (வயது 17). இவர் விஜயமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். கோபிகா சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவரது பெற்றோர் கோபிகாவை நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

    இந்நிலையில் பிளஸ் 1 பொதுதேர்வு தொடங்க இருந்ததால் கோபிகா பதற்றத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் செந்தில்குமார், அருக்காணி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாணவி கோபிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது தேர்வு பயத்தில் இருந்த மாணவி கோபிகா திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் காலை 11 மணி அளவில் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் தனது மகள் கோபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    இதுகுறித்து திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்வு பயத்தின் காரணமாக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    டி. என். பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    டி. என். பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து குறித்து  பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் ரெட்டியூரை சேர்ந்த குமார் (வயது 30) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து லாரியில் அட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்றார். 

    ஈரோடு மாவட்டம் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் உள்ள பங்களாப்புதூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 

    இதில் சாலையில் சென்று கொண்டிருந்த டி.என்.பாளையம் பெருமாள் கவுண்டர் வீதியை சேர்ந்த சையத்ரகமத்துல்லா (வயது 65) என்பவர் மீது மோதியதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 

    தகவலறிந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் வகையில் சோலாரில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம் பயணிகள் ஓய்வு அறை, முன்பதிவு மையமும் அமைகிறது.
    ஈரோடு:

    தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் வகையில் சோலாரில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம் பயணிகள் ஓய்வு அறை, முன்பதிவு மையமும் அமைகிறது.

    ஈரோடு பஸ் நிலை யத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மாநகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் பஸ்கள் வந்து செல்லும் போது கடும் போக்குவரத்து நிலவி வருகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 புதிய பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கரூர், மதுரை, திருச்சி, ெநல்லை, நாகர்கோவில் என தென் மாவட்டங்களுக்கு வந்து  செல்லும் பஸ்களுக்காக கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சோலாரில் நவீன புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி புதிய பஸ் நிலையம் அமையும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 52 ஏக்கரில் உள்ள இடத்தில்  24 ஏக்கரில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக ரூ.63.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் மண் வைத்து சமப்படுத்தும் பணி தொடங்கி முடிந்துள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 63  பஸ்கள் நிற்கும் ரேக்குகள்  அமைக்கப்பட உள்ளன.
    மேலும் பஸ் நிலையம் அருகே டவுன் பஸ் வந்து செல்லும் வகையில் புதிய ரேக்குகள் அமைக்கப்படுகிறது. பஸ் நிலையம் சுற்றி 163 கடைகள் அமைக்கப்படுகிறது. பயணிகள் ஓய்வு அறைகள், கழிப்பிட வசதிகள், முன்பதிவு கவுண்டர் அமைய உள்ளது.

    மேலும் மோட்டார் சைக்கிள்கள் நிற்கும் ஸ்டாண்டுகள், ஆட்டோ ஸ்டாண்ட் கள் அமைக்கப்படுகிறது. பஸ் நிலையம் அமைப்பதற்கான டெண்டர்கள் இன்னும் 3 வாரத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். டெண்டர் முடிந்ததும் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து 2 வருடத்திற்குள் புது பஸ்நிலையம் கட்டி முடிக்க ப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இந்த புதிய பஸ் நிலையம் அமைந்தால் மாவட்ட வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும்  என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோட்டில் அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தியதில் 3 உணவகங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தியதில் 3 உணவகங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர்‌  உத்தரவின்‌ பேரிலும், ஈரோடு‌ மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தலின் பேரிலும், மாவட்ட உணவு நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈரோட்டில் நேற்று மாலை ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்கள் உட்பட 15 கடைகளில் தீவிர சோதனை மேற்கொ–ண்டனர்.

    இந்த சோதனையின் போது சமைத்து பின்னர் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரமான முறையில் பராமரிக்காத 3 உணவகங்களுக்கு  ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    இதுகுறித்து உணவு நியமன அலுவலர் தங்க–விக்னேஷ் கூறியதாவது:-

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை ஷவர்மா தயாரிக்கும் ஓட்டல்கள், அசைவ உணவகங்கள் உட்பட 15 கடைகளில் சோதனை செய்ததில் சமைத்து பின்னர் குளிர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பொரித்த எந்த வகை உணவாக இருந்தாலும் அவற்றை பேப்பரில் வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

     அவ்வாறு விற்கும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொரித்த உணவுகளை பேப்பரை வைத்து விற்க கூடாது. அது உடல்நலத்திற்கு கேடாகும். நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேல் வியாபாரமாகும் உணவ–கங்கள் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆயிரத்துக்கு கீழ் உள்ள கடைகள் உரிமம் பதிவு செய்திருக்க வேண்டும். 

    இதேப்போல் உணவு–களில் சிலர்  கலரை கலப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு.  அது உடல்நலத்திற்கு கேடாகும்.
     பொதுமக்கள் உணவு பொருள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 9444042322 என்ற வாட்சப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இன்று 2-வது நாளாக அசைவ உணவகங்களில் சோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    கோபி செட்டிபாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் திருவிழா நடைபெறவில்லை. 

    இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று 5-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 11-ந் தேதி புதன்கிழமை அன்று கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    16-ந் தேதி மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற உள்ளது. 17 -ந் தேதி மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும், பட்டுபோர்த்தி ஆடுதல்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

    18-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதலும், இரவு 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .19-ந் தேதி காலை 7 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் ,9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதலும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து அக்கினி அபிஷேகம்,பெரிய பூஜை, பக்தர்கள் அக்னி கும்பம் எடுத்து வருதல், அலகு குத்துதல்,ஆகியவை நடைபெற உள்ளன. அன்று இரவு 8 மணி அளவில் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20,21-ந் தேதிகளில் மஞ்சள் நீர் உற்சவம், 21-ந் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.

    சென்னிமலையில் விசைத்தறி அதிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் விசைத்தறி அதிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    சென்னிமலை அருகே  உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி கொளத்துப்பாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி, (47) இவரது மனைவி பார்வதி. குப்புசாமி தனது வீட்டில் சொந்தமாக இரண்டு விசைத்தறிகள் நடத்தி வருகிறார்.

     இவரது விசைத்தறி கூடத்தில் இயங்கும் விசைத்தறிகளை ஓட்டாமல் நிறுத்தக்கோரி அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் குப்புசாமியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் உருட்டுக்கட்டையால் குப்புசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

     இதனை தடுக்க வந்த குப்புசாமியின் மனைவி பார்வதிக்கும் அடி விழுந்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குப்புசாமியும், அவரது மனைவி பார்வதியும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

    இதுகுறித்து கண்ணன் மீது குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு தொடங்கியது.

    தமிழகத்தில் இன்று பிளஸ்- 2 பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வை மாணவ- மாணவிகள் எழுதுவதற்காக மொத்தம் 107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று மையங்கள் தனித்தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மாவட்டத்தில் 416 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 24 ஆயிரத்து 909 மாணவ-மாணவிகள் பிளஸ்- 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வை எந்த ஒரு சிரமமுமின்றி எழுதும் வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

    தேர்வு மையங்களில் மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தன. மேலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இன்று காலை சீக்கிரமாகவே அந்தந்த தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வந்து விட்டனர். மாணவ -மாணவிகள் அந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தேர்வை நல்லபடியாக எழுத வேண்டும் என்று சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிறிது நேரம் படித்தனர். தேர்வு எழுதச் செல்லும் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்ததும் முதல் 10 நிமிடம் வினாத்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அடுத்த 5 நிமிடம் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் முறை குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து 10:15 தேர்வு தொடங்கியது. 

    தேர்வு அறை பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வை தீவிரமாக கண்காணித்தனர்.

    பெருந்துறை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:


    பெருந்துறை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ருக்மாங்கதன் (23).

     இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறை அடுத்துள்ள பல்ல கவுண்டன்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையின் இடது புறம் நடப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்று பலத்த மழையால் சாலையில் சாய்ந்து இருந்ததை கவனிக்காமல் வேகமாக சென்று மின்கம்பத்தில்  மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே ருக்மாங்கதன் பரிதாபமாக இறந்தார்.
     இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் இறைச்சியுடன் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் இறைச்சியுடன் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இவற்றில் அதிகமாக புள்ளி–மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்ப–குதியில் மான்கள் வேட்டை–யா–டப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சத்திய–மங்கலம் வனக்கோட்டம், விளாமுண்டி வனச்ச–ரகம் குமரன் கோவில் சரகப்பகுதியில் விளா–முண்டி வனவர் ஆறுமுகம் தலைமையில் வனக்காப்பாளர்கள் ஹரிவிக்னேஷ், ரவிராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது 108 குமரன் கோவில் வனப்பகுதியில் தெருநாய்களால் கடிக்க–ப்பட்டு இறந்து கிடந்த புள்ளிமான் இறைச்சியினை 3 பேர் சேர்ந்து துண்டுகளாக வெட்டி அதனை மஞ்சள் நிற சாக்குப்பையில் எடுத்து வைத்திருந்தனர்.  இதையடுத்து வனத்து–றையினர் வனப்ப–குதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த 3  பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் மான் இறைச்சி இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் தொப்பம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த பழனிச்சாமி (45), வெள்ளாளபாளையம் தொப்பம்பாளையத்தைச் சேர்ந்த நல்லதம்பி (39), வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (44) என்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து அவர்களி–டமிருந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்கள் 3 பேரையும் சத்திய–மங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அந்தியூர் அருகே உயர் விளைச்சல் ரக சோள விதைப் பண்ணையில் ஆய்வு செய்தனர்.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே உயர் விளைச்சல் ரக சோள விதைப் பண்ணையில் ஆய்வு செய்தனர்.

    அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதியில் ராஜா என்ற விவசாயி கே12 என்ற உயர்விளைச்சல் சோளம் ரகத்தினை பயிரிட்டு விதைப் பண்ணையாக பதிவு செய்துள்ளார்.  இந்த ரகமானது 95 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். மேலும், மானாவரிக்கு ஏற்றது. ஏக்கருக்கு 3000 கிலோ வரை மகசூல் தரக் கூடியது.

    இவ்விதைப் பண்ணையினை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம்  ஆய்வு செய்தார். மேலும், கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று  இயக்குநர் மு.சுப்பையா  உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களுக்கு சோளம் விதைப்பண்ணையில் கலவன்கள் கண்டறிதல், கலவன்களை அகற்றுதல், குறித்தறிவிக்கப்பட்ட நோய்களை கண்ட–றிதல் குறித்து பயற்சி–யளி–க்கப்பட்டது. சாகுபடியாளருக்கு பயிர் பராமரிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

    மேலும், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் கூறிய–தாவது, இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறுதானிய பயர்களின் உற்பத்தியை அதிகரிக்க இவ்விதைப் பண்ணையிலிருந்து கிடைக்கும் விதைகளை சுத்தி செய்து விதை மாதிரியில் தேர்ச்சி பெற்றவுடன் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்தார். 
    இப்பயிற்சியின்போது விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி உடனிருந்தார்.

    ×