என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பு படித்துக்கொண்டிருந்த காட்சி
பிளஸ் -2 பொதுத் தேர்வு தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு தொடங்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு தொடங்கியது.
தமிழகத்தில் இன்று பிளஸ்- 2 பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வை மாணவ- மாணவிகள் எழுதுவதற்காக மொத்தம் 107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று மையங்கள் தனித்தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 416 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 24 ஆயிரத்து 909 மாணவ-மாணவிகள் பிளஸ்- 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வை எந்த ஒரு சிரமமுமின்றி எழுதும் வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தேர்வு மையங்களில் மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தன. மேலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை சீக்கிரமாகவே அந்தந்த தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வந்து விட்டனர். மாணவ -மாணவிகள் அந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தேர்வை நல்லபடியாக எழுத வேண்டும் என்று சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிறிது நேரம் படித்தனர். தேர்வு எழுதச் செல்லும் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்ததும் முதல் 10 நிமிடம் வினாத்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அடுத்த 5 நிமிடம் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் முறை குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து 10:15 தேர்வு தொடங்கியது.
தேர்வு அறை பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வை தீவிரமாக கண்காணித்தனர்.
Next Story






