என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விசைத்தறி அதிபரை தாக்கியவர் மீது வழக்கு

    சென்னிமலையில் விசைத்தறி அதிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் விசைத்தறி அதிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    சென்னிமலை அருகே  உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி கொளத்துப்பாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி, (47) இவரது மனைவி பார்வதி. குப்புசாமி தனது வீட்டில் சொந்தமாக இரண்டு விசைத்தறிகள் நடத்தி வருகிறார்.

     இவரது விசைத்தறி கூடத்தில் இயங்கும் விசைத்தறிகளை ஓட்டாமல் நிறுத்தக்கோரி அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் குப்புசாமியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் உருட்டுக்கட்டையால் குப்புசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

     இதனை தடுக்க வந்த குப்புசாமியின் மனைவி பார்வதிக்கும் அடி விழுந்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குப்புசாமியும், அவரது மனைவி பார்வதியும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

    இதுகுறித்து கண்ணன் மீது குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×