search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரதா மாரியம்மன்.
    X
    சாரதா மாரியம்மன்.

    சாரதா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

    கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    கோபி செட்டிபாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் திருவிழா நடைபெறவில்லை. 

    இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று 5-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 11-ந் தேதி புதன்கிழமை அன்று கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    16-ந் தேதி மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற உள்ளது. 17 -ந் தேதி மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும், பட்டுபோர்த்தி ஆடுதல்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

    18-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதலும், இரவு 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .19-ந் தேதி காலை 7 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் ,9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதலும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து அக்கினி அபிஷேகம்,பெரிய பூஜை, பக்தர்கள் அக்னி கும்பம் எடுத்து வருதல், அலகு குத்துதல்,ஆகியவை நடைபெற உள்ளன. அன்று இரவு 8 மணி அளவில் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20,21-ந் தேதிகளில் மஞ்சள் நீர் உற்சவம், 21-ந் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.

    Next Story
    ×