என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி 2 பேரும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் ஈஸ்வரன் (34). விவசாயம் செய்து வருகிறார். ஈஸ்வரனுக்கும், சரண்யா (28) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மழை வந்ததால் துவைத்து உலர வைத்திருந்த துணியை எடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு ஈஸ்வரன் மனைவி சரண்யாவிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார்.

    அதை பார்த்த சரண்யாவும் அதே பூச்சி மருந்து பாட்டிலை பிடுங்கி குடித்து உள்ளார். பூச்சி மருந்தை குடித்து கணவன், மனைவி 2 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்த கருப்பணன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். ஈஸ்வரன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரண்யாவுக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி 2 பேரும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி மயக்க மருந்து தடவி விவசாயி வீட்டில் பணம்நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

    குமாரசாமி கால் வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அப்போது அவருக்கு தெரிந்தவர்கள் நாட்டு வைத்தியர் ஒருவர் இருக்கிறார். அவர் மருந்து கொடுத்தால் எளிதில் குணமாகிவிடும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து குமாரசாமி நாட்டு வைத்தியரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி உள்ளார். அதன்படி சம்பவத்தன்று குமாரசாமியின் வீட்டுக்கு நாட்டு வைத்தியர் என்று கூறிக்கொண்டு ஒரு வாலிபர் வந்தார்.

    அவர் குமாரசாமியிடம் உங்கள் கால் வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார். குமாரசாமியும் இதை நம்பினார்.

    இந்நிலையில் நாட்டு வைத்தியர், குமாரசாமி மற்றும் அவரது மனைவி, மகன் மீது பவுடர் போன்ற ஒரு மயக்க பொடியை கலந்து அவர்களது மீது தடவினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் மயங்கி விட்டனர்.

    பின்னர் அந்த நாட்டு வைத்தியர், குமாரசாமி வீட்டில் இருந்த ரூ.48 ஆயிரம் பணம் மற்றும் 4 கிராம் தங்க தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

    சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டு வைத்தியர் இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது பணம்-நகை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது

    பின்னர் தன்னை ஏமாற்றி நாட்டு வைத்தியம் பார்ப்பதாக வந்த நபர் வீட்டில் திருடிச் சென்றது குறித்து குமாரசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நாட்டு வைத்தியர் யார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    பெருந்துறை பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாகவே மோட்டார்சைக்கிள் திருட்டுப் போயுள்ளன.
    பெருந்துறை:

    பெருந்துறை பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாகவே மோட்டார்சைக்கிள் திருட்டுப் போயுள்ளன. 

    இதுதொடர்பாக வந்த புகார்களை அடுத்து பெருந்துறை போலீசார் 6 மோட்டார்சைக்கிள் திருடு போய்விட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை, வீரப்ப ம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (33). 

    இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை என்று பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை, விஜயமங்கலம், கோவை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரிவின் ரித்தியா (26) என்பவர் தனது மோட்டார்சைக்கிளை ரூம் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். 

    காலை வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் காணவில்லை என பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், பாவடி வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (50). 

    இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டா ர்சைக்கிளை காணவில்லை, என்று பெருந்துறை ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதே–போன்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை, விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பி–ரமணி (50) என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டா–ர்சைக்கிளை காணவில்லை என பெருந்து றை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

    இதேபோல் பெருந்துறை பவானி ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவர் தனது மோட்டார்சைக்கிளை ஈரோடு ரோடு பகுதியில் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். 

    மதியம் வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிைள காணவில்லை. 

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை, விஜயமங்கலம், வாய்ப்பாடி ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பவர் ஈரோடு ரோடு பகுதியில் மண் பாதை ஓரம் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று உள்ளார். 

    இரவு வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. 

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இந்நிலையில் காணாமல்போன 6 மோட்டார்சைக்கிளையும் ஒரே நாளில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
    வாரச்சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்ததால் வாழைத்தார் விலை உயர்வு ஏற்பட்டது.
    கவுந்தப்பாடி:

    வாரச்சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்ததால்  வாழைத்தார் விலை உயர்வு ஏற்பட்டது.

    கவுந்தப்பாடி வாரச்சந்தையானது வாரம் தோறும் செவ்வாய் புதன் கிழமைகளில் நடைபெறும். 

    சந்தையில் முக்கிய வியாபாரமாக செவ்வாய்க்கிழமை அன்று வாழைத்தார் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதியான பாண்டியன் பாளையம், வேலம்பாளையம், மணியம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம் , பொன்னாச்சி புதூர், பெருந்தலையூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதில் குறிப்பாக பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, கதலி, தேன்வாழை மற்றும் மொந்தன் போன்ற வாழைத்தார்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.மேலும் அண்டை மாவட்டங்களான கரூர் திருச்சி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அதிக அளவில் வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    குறிப்பாக 200 -250 காய்களை கொண்ட பூ வந்தார் ரூ.600, 100 -125 காய்களை கொண்ட செவ்வாழை தார் 300 ரூபாய்க்கும். 75-100 காய்களை கொண்ட ரஸ்தாலி 250 க்கும் விற்கப்பட்டது .

    இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகளும் அதிக அளவில் வந்து வாழைத்தார்களை வாங்கிச் செல்வார்கள்.  

    கடந்த இரண்டு வாரங்களாக பலத்த சூறாவளி காற்று மற்றும் மழையும் பெய்து வருகிறது. பல்லாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது இதனால் வாரச் சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்து.
      
    அதனால் வாழைத்தார் விலை சென்ற வாரத்தை விட 200, 300 என்று ஒவ்வொரு ரகத்திற்கும் விலை உயர்வு ஏற்பட்டது. 

    இதனால் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அதிக விலை கொடுத்து குறைந்த எண்ணிக்கையில் வாழைத்தார்களை வாங்கிச் சென்றார்கள். 

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, அடுத்த மாதம் வரப்போகும் முகூர்த்த காலங்களில் இன்னும் சற்று கூடுதலாக விலை இருக்கும் என்று கூறினார்கள்.
    கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்
    கோபி:

    கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர். 

    விடுமுறை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

    இங்கு பொறிக்கப்படும் மீன்களை சாப்பிடுவதற்கு என்றே மக்கள் கூட்டம் தனியாக உள்ளது. 

    காளிங்க–ராயன் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் போது கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிவேரி அணை பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

    கடந்த 9-ந் தேதி முதல் மீண்டும் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பவானிசாகர் அணையிலிருந்து காளிங்க–ராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. 

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். 

    வரும் வாரத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தண்ணீர் குறைவாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    பூஸ்டர் தடுப்பூசி, 3,248 சுகாதார பணியாளர்கள், 2,929 முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட, 9 ஆயிரத்து, 770 பேர் என, 15 ஆயிரத்து, 947 பேர் செலுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    இந்தியாவில் கொரோனா தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், அதன் பின்னர் 45 வயது மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், அதன் பின்னர் 18 வயதுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 15 முதல் 18 வயது இன்றைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    அதன் பின்னர் 12 முதல் 14 வயது உடைய குழந்தைகளுக்கும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    ஈரோடு மாவட்டத்திலும் கொரோணா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    மாவட்டத்தில் இதுவரை கொரோனா முதல் தவணை தடுப்பூசியை, 16 லட்சத்து, 54 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 13 லட்சத்து 14 ஆயிரத்து, 648 பேரும் செலுத்தி உள்ளனர். 

    இதில், முதல் தவணையாக, 9,210 மாற்றுத்திறனாளி–களுக்கும், இரண்டாம் தவணையாக, 6,447 மாற்றுத்திறனா–ளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில், 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட, 1.54 லட்சம் மாணவர்களும் அடங்குவர்.

    தவிர பூஸ்டர் தடுப்பூசி, 3,248 சுகாதார பணியாளர்கள், 2,929 முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட, 9 ஆயிரத்து, 770 பேர் என, 15 ஆயிரத்து, 947 பேர் செலுத்தி உள்ளனர்.

    தவிர ஒவ்வொரு வாரமும், வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என சுகாதாரத்துறையினர் கேட்டு கொண்டனர்.
    தாமரைகரையிலிருந்து மடம் வரை செல்லும் சாலையில் மழை காலங்களில் சேறும் சகதியும் ஏற்படுவதால் அரசு பஸ் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர்தாமரைக் கரையிலிருந்து மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பிரிவுகளாக உள்ளது. 

    தாமரைக்கரைலிருந்து கிழக்கு மலை பகுதிகளான தேவர்மலை, ஈரட்டி மடம் உள்ளிட்ட 12 கிராம பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் தரைப்பாலம் உள்ளது.

    இந்த தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் வருவதால் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. 

    இதனை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து அந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

    கடந்த 2 மாதங்களாக இந்த பணி மந்தமாக நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 

    இதனால் தாமரைகரையிலிருந்து மடம் வரை செல்லும் சாலையில் மழை காலங்களில் சேறும் சகதியும் ஏற்படுவதால் அரசு பஸ் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

    எனவே உடனடியாக பாலம் வேலையை தொடங்கி விரைந்து முடிக்க அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ண னுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ண னுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடைமடைக்கு தண்ணீர் போய் சேர வேண்டும்.
     
    அதே நேரத்தில் அதற்கு முன்னால் இருக்க  கூடிய விவசாய நிலங்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்து கொண்டிருந்த தண்ணீர் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் வீணாக ஆற்றுக்கு செல்கின்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. 

    அதேபோல் தண்ணீர் முழுவதும் கடைமடை வரை வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்படுகின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    வாய்க்கால் அடிப்பகுதியில் கான்கிரீட் போடும் பணி மேற்கொள்ள இருந்தது. தற்போது விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று கான்கீரீட் தளங்கள் அமைக்கக் கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாய்க்கால்களின் பக்கவாட்டு பகுதியில் முழுமையாக சேதமான இடங்களில் அமைந்துள்ள தடுப்பு சுவர்கள் சீர் செய்யப்படவுள்ளது. 

    கீழ்பவானிதிட்டத்தினை பயன்படுத்துகின்ற விவசாயிகள் மற்றும் கடைமடையில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதே அரசின் நோக்க–மாகும்.

    தற்போது வாய்க்காலை ஒட்டியுள்ள பழுதடைந்த பாலங்கள் சிறிய அளவில் இருப்பதால் அதனை பெரிதுபடுத்தி டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்  வகையில்  பாலம்  விரிவுபடுத்திட விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

    இத்திட்டத்தில் பயன்பெறுகின்ற விவசாயிகள் அனைவரும் முழுமையா கபாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மேலும் கிணறுகளில் ஊற்று மூலம்  தண்ணீர் பெறுகின்ற விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

    விவசாயிகள் இரு பிரிவாக வெவ்வேறு கருத்துகளுடன் உள்ளனர். ஒரு பக்கம் கான்கிரீட் அமைத்து கீழ் மடைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்றும், மறுபக்கம் கான்கிரீட் அமைப்பதால் மேல்மடையில் இருக்கின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். 

    விவசாயிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை மேற்கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடியிலுள்ள கரிய காளியம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடியிலுள்ள கரிய காளியம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. 

    கடந்த 26-ந்தேதி  பூச்சாட்டுதலுடன் தொடங்கி நேற்று முன்தினம் சக்தி அழைத்தல், புதுப்பாளையம் சென்று கருமலை ஆண்டவரை அழைத்து வருதல், குண்டம், பொங்கல் வைத்து குண்டம் தீ மூட்டுதல் போன்றவை நடைபெற்றது. 

    அதனைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமை அன்று முப்போடு படைக்கலம் அழைத்தல், திருட்டு கருமலை ஆண்டவரை அழைத்து வருதல், குதிரை துலுக்கு பிடித்தல், செலம்பூரம்மனை அழைத்து வந்து குண்டம் இறங்குதல், எருமைக்கிடா வெட்டுதல், ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. 

    சுமார் 75 அடி நீள குண்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர், முன்னதாக கோவில் பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். 

    இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராடுதலுடற் திருவிழா நிறைவு பெருகின்றது.
    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
    ஈரோடு:

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்  பவானி ஆற்றில் கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டுகுடிநீர் திட்டம் வகுக்கப்பட்டது. ரூ.224 கோடி செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இத்திட்டத்தின் மூலம் பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4.49 லட்சம் மக்களுக்கு தினமும் 16.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையிலான இத்திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ,  மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 பில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும்.இந்தத் திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. 

    இந்தக் கிணற்றில் இருந்து குடிநீர் ஆனது 29, 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான இயல்பு நீர் குழாய்கள் மூலம் திங்களூர் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. 17.23 எம் எல் டி திறன் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். 

    இந்த திட்டத்தின் மூலம் 4.49 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 16.40 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீர் வழங்கப்படும்.
    பெருந்துறையில் மளிகை கடையில் திருட்டு போன சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறையில் மளிகை கடையில் திருட்டு போன சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு தண்ணீர்பந்தல் பகுதி சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). 

    இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

    அதிகாலை பக்கத்து கடைக்காரர் வீட்டிற்கு வந்து உங்கள் கடையின் பூட்டு உடைந்து, இரும்பு கதவு திறந்து உள்ளதாக கூறினார்.

     உடனடியாக சக்திவேல் கடைக்கு சென்று பார்த்த போது கதவு திறந்திருந்தது. 

    உள்ளே இருந்த 4 மூட்டை அரிசி மற்றும் ரூ.27 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. 

    இது தொடர்பாக வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. 

    நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

     இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.99 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  

    தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 300 கன அடி,  கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 455 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
    ×