என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஈரோடு:
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பவானி ஆற்றில் கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டுகுடிநீர் திட்டம் வகுக்கப்பட்டது. ரூ.224 கோடி செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இத்திட்டத்தின் மூலம் பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4.49 லட்சம் மக்களுக்கு தினமும் 16.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையிலான இத்திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 பில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும்.இந்தத் திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கிணற்றில் இருந்து குடிநீர் ஆனது 29, 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான இயல்பு நீர் குழாய்கள் மூலம் திங்களூர் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. 17.23 எம் எல் டி திறன் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் 4.49 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 16.40 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீர் வழங்கப்படும்.
Next Story






