என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் லாட்டரி சீட்டில் பணத்தை இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    ஈரோட்டில் லாட்டரி சீட்டில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கண்ணீருடன் பேசினார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    “எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்” நான் சாக காரணம் கருங்கல்பாளையம் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில். லாட்டரி ஏஜென்சி அவர் தான் காரணம். இந்த லாட்டரியால் 62 லட்சத்தை இழந்து விட்டேன்.

    அதனால் என்னால் தாங்க முடியல. நான் உயிரோடு இருந்தால் இன்னமும் லாட்டரி  போட்டுகிட்டே இருப்பேன். இதனால் நான் பைத்தியமாகி விடுவேன். அதனால் என் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக 30 லட்சம் செந்திலிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும்.

    இதற்கு உறவினர்கள், நண்பர்கள் எப்படியாவது உதவி செய்து பணத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். மாண்புமிகு அமைச்சர் அண்ணன் முத்துசாமி அவர்களுக்கு  நான் தற்கொலை செய்து கொள்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். இதை சொல்வதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது அண்ணா.

    நீங்கள் தான் எப்படியாவது என் குடும்பத்துக்கு நஷ்டஈடு வாங்கி கொடுக்க வேண்டும். அதேபோல் என் பொண்ணு எம்.காம்.சி.ஏ. படித்து உள்ளார். அவருக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கி கொடுங்க அண்ணா இது தான் என் கடைசி ஆசை. இதை நிறைவேத்துங்க அண்ணா.

    லாட்டரியை  ஒழிச்சிருங்கள் அண்ணா. எத்தனையோ குடும்பம் இதனால் ரொம்ப ரொம்ப பாதிச்சிருச்சி. அதுக்கு நடவடிக்கை  எடுக்கணும். இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்ததுக்கு என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க. அண்ணா நீங்களும் மன்னிருங்க அண்ணா என்னால தாங்க முடியல அண்ணா என்று அதில் பதிவிட்டு உள்ளார்.

    வீடியோவில் ராதாகிருஷ்ணன் கூறிய கவுன்சிலர் கீதாஞ்சலி தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது கணவர்தான் செந்தில்.

    வெள்ளோடு அருகே கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 7பவுன் தங்க நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெருந்துறை:

    வெள்ளோடு அருகே கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 7- பவுன் தங்க நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


    பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, சிறுவன்காட்டுவலசு பகுதியிலுள்ள மொளிப்பள்ளி அண்ணமார் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் கோவிலுக்குள் சென்று பூசாரியிடம் விபூதி வாங்க ஏராளமான பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றனர். மொடக்குறிச்சி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி செல்வி (வயது 47). இவர் கழுத்தில் 5 பவுன் இரட்டைவட தங்க செயின் அணிந்து இருந்தார். பூசாரியிடம் விபூதி வாங்கிவிட்டு திரும்பி பார்த்தபோது தங்க நகையை காணவில்லை. 

    இதேபோன்று ஈரோடு கஸ்பாபேட்டை கள்ளகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மனைவி லட்சுமி (வயது 75). இவர்தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் காணவில்லை.

    பவானி அருகே பணத்தை திருப்பி கேட்ட தந்தையை கத்தியால் கீறிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
    பவானி அருகே பணத்தை திருப்பி கேட்ட தந்தையை கத்தியால் கீறிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

    பவானி அடுத்த கேசரிமங்கலம் சித்தார் - மேட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 70). இவரது மனைவி இருசாயி (60). அதே பகுதியில் முத்துவின் மகன் மாது என்கிற மாதப்பன் (40) என்பவரும் வசித்து வருகின்றார்.

    இந்நிலையில் முத்து தனது மகன் மாதப்பனுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மகனிடம் தான் கொடுத்த பணத்தை முத்து திருப்பி கேட்டுள்ளார். அப்போது மாதப்பன் தந்தை என்று பாராமல் தகாத வார்த்தையால் பேசி, உனக்கு எதற்கு பணம் தர வேண்டும், பணம் திரும்ப கேட்டால் கத்தியால் குத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் மாதப்பன் கத்தியால் முத்துவின் இடது கை உள்பக்கமாக மணிக்கட்டுக்கு மேல் கீறி உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் முத்துவை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சசைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பென்டர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
    ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவன் மாயமமான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவன் மாயமமான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் மேகநாத் (14) என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காப்பகத்தில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி மேகநாத் வெளியே சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் காப்பகத்துக்கு வரவில்லை. இதையடுத்து பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் பள்ளிக்கு வரவில்லை என தெரிய வந்தது.

     அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்து நூல் கமிஷன் ஏஜெண்ட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் லாட்டரி, வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தி நடத்தப்படும் லாட்டரிகள் குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் ஒருவர் ஈரோட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). நூல் கமிஷன் ஏஜெண்ட். இவரது மனைவி மாலதி (52). இவர்களுக்கு திவ்யபாரதி, ஆனந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் திவ்யபாரதி கணவர் இறந்ததால் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆனந்தி குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.  

    ஆரம்பத்தில் ராதாகிருஷ்ணன் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜெண்டாக வேலைபார்த்து வந்தார்.

    இந்நிலையில்தான் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை வாட்ஸ் அப் வீடியோ பதிவிட்டு தான் லாட்டரி சீட்டை நம்பி ரூ.62 லட்சம் வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிருடன் இருந்தால் அதற்கு மேலும் அடிமை ஆகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என அந்த வீடியோவில் பதிவிட்டு ராதாகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கருங்கல்பாளையம் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் செந்திலிடம் லாட்டரி சீட்டு வாங்கி இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

    இதுபற்றி தெரிய வந்ததும்  வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாட்டரி சீட்டில் ராதாகிருஷ்ணன் ரூ.62 லட்சத்தை எந்த காலகட்டத்தில் எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 215 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் லாட்டரி விற்பனையை தடுக்க, ரகசிய தகவலை சேகரிக்க, வாட்ஸ்அப் குழுக்களை ஊடுருவி தகவலை சேகரிக்க தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நூல் ஏெஜண்ட்  ராதாகிருஷ்ணன் லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்து நூல் கமிஷன் ஏஜெண்ட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயக்க மருந்து தடவி விவசாயி வீட்டில் பணம்-நகை திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னிமலை:

    மயக்க மருந்து தடவி விவசாயி வீட்டில் பணம்-நகை திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
     
     ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

    குமாரசாமி கால் வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். 

    அப்போது அவருக்கு தெரிந்தவர்கள் நாட்டு வைத்தியர் ஒருவர் இருக்கிறார். 

    அவர் மருந்து கொடுத்தால் எளிதில் குணமாகிவிடும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து குமாரசாமி நாட்டு வைத்தியரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி உள்ளார். 

    அதன்படி சம்பவத்தன்று குமாரசாமியின் வீட்டுக்கு நாட்டு வைத்தியர் என்று கூறிக்கொண்டு ஒரு வாலிபர் வந்தார்.

    அவர் குமாரசாமியிடம் உங்கள் கால் வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார். குமாரசாமியும் இதை நம்பினார். 

    இந்நிலையில் நாட்டு வைத்தியர், குமாரசாமி மற்றும் அவரது மனைவி, மகன் மீது பவுடர் போன்ற ஒரு மயக்க பொடியை கலந்து அவர்களது மீது தடவினார். 

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் மயங்கி விட்டனர்.

    பின்னர் அந்த நாட்டு வைத்தியர், குமாரசாமி வீட்டில் இருந்த ரூ.48 ஆயிரம் பணம் மற்றும் 4 கிராம் தங்க தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். 

    சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டு வைத்தியர் இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தனர். 

    இதையடுத்து அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது பணம்-நகை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது

    பின்னர் தன்னை ஏமாற்றி நாட்டு வைத்தியம் பார்ப்பதாக வந்த நபர் வீட்டில் திருடிச் சென்றது குறித்து குமாரசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நாட்டு வைத்தியர் யார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
    12-வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுமையாபானு நகராட்சி தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் அவசர கூட்டம் இன்று காலை நடந்தது. 

    கூட்டம் நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் தொடங்கியது.
     
    கூட்டம் தொடங்கியதும் 12-வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுமையாபானு நகராட்சி தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது தனது வார்டுக்குட்பட்ட சி.கே.எஸ். நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்ய கூறி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். 

    அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அதைத்தொடர்ந்து குடிநீர் குழாயை சீரமைக்க நேற்று முதல் ஆட்கள் வேலை செய்து வருவதாகவும், வார்டில் உள்ள பிரச்சினைகளை  நகராட்சி தலைவர் என்ற முறையில் தெரிவித்தால் உடனடியாக பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் என்று நகராட்சி தலைவர் நாகராஜ் தெரிவித்தார். 
     
    அதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டு  கூட்டத்தில் கலந்து கொண்டார்.
    ஈரோட்டில கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்.
    ஈரோடு:

    ஈரோட்டில கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்.

    ஈரோடு ராசாம்பாளையம் முத்துமணி நகரை சேர்ந்த வர் குமார். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் மகாலட்சுமி (17). 

    இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
     
    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மகாலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். 

    வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்த மகாலட்சுமி திடீரென காணவில்லை.

    வெளியே சென்று இருந்த அவரது தாய் சசிகலா வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்கு மகாலட்சுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் மகாலட்சுமி குறித்து எந்த தகவலும் கிடக்கவில்லை. 

    இது குறித்து சசிகலா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி ஜீவிதா (20). கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன்- மனைக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து கணவருடன் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள அவரது தாய் செல்வி வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. 

    அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்  தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து செல்வி வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி அருகே உள்ள கருங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். 

    இவரது மனைவி லட்சுமணன். இவர்களது மகள் தீபிகா (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தீபிகா திடீரென காணவில்லை. 

    அக்கம் பக்கம் தேடி பார்த்தும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து லட்சுமணன் கொடுமுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சம்பத், இவரது மனைவி சித்ரா. 

    இவர்களது மகள் கவுரி மாலா (18). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு  நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவுரிமாலா திடீரென மாயமாகி விட்டார்.

     அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவர் கிடைக்க வில்லை.

    இது குறித்து சித்ரா பெருந்துறை போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    3 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் திடீரென மணி பர்சை கீழே தள்ளி அவரது பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.700, செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
    ஈரோடு:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி அன்புநகர், ஓலப்பாளையம் வீதியை சேர்ந்தவர் மணீஸ் (33). இவர் திருப்பூரில் உள்ள கார்மெண்ட்ஸ்சில்  பணியாற்றி வருகின்றார். 

    சம்பவத்தன்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பெத்தாம்பாளையம் பிரிவில் இருந்து சிலேட்டர் புறம் செல்வதற்காக சர்வீஸ் சாலையில் தனது  மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
     
    அப்போது அரசு பாலிடெக்னிக் அருகே சென்ற கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த  3 பேர் கொண்ட  வழிப்பறி கும்பல் திடீரென மணீசை கீழே தள்ளி  அவரது பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.700, செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து மணீஸ் பெருந்துறை போலீசில் புகார்  செய்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    மகளிர் தங்கும் விடுதிகள்
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவனம் நடத்தும் மகளிர் விடுதி மற்றும் அனைத்து பெண்கள் தங்கி பயிலும் மகளிர் கல்லூரி விடுதிகள் அரசிடம்  உரிமம் பெற்று விடுதிகள் இயக்கப்பட வேண்டும். 

    மகளிர் விடுதிகள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் அனைவரும் தங்களது கருத்துரு உடன் வருகிற 30-ந் தேதிக்குள் ஈரோடு கலெக்டர் அலுவலக  6-வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. 

    மேலும், தவறும் பட்சத்தில் விடுதிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

    முதியோர் இல்லத்தினை பதிவு செய்யாமல்  இருப்பவர்கள்  மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ளதாவர்கள் அனைவரும் தங்களது கருத்துருஉடன்  30-ந்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தின்  6-வது தளத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. 

    தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து தாலுகாவிலும் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம். 

    அதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை  திருவேங்கடம்பாளையம் புதூர் கடை, மொடக்குறிச்சி   கரும்பாறை  முள்ளாம்பரப்பு கடை, கொடுமுடி வேலாயுதம்பா ளையம் கடை, கோபி  பாஸ்கரா 2 கடை, நம்பியூர்   குருமந்துார் கடை, பவானி  மைலம்பாடி கடை, அந்தியூர்   பட்லூர் நான்கு ரோடு கடை, தாளவாடி  கரளவாடி கடையில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    வேகமாக வந்த கார் மொபட் மீது மோதி கல்லூரி மாணவர் பலி.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் கல்வெட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் மனோஜ்குமார் (21). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

    சம்பவத்தன்று மனோஜ்குமார் கல்லூரி முடிந்து தனது நண்பர் ஸ்ரீதர் என்ற மாணவருடன் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    ஸ்ரீதர் வண்டியை ஓட்டி வந்துள்ளர்.மனோஜ்குமார் பின்னால் அமர்ந்து வந்து உள்ளார். 

    இருவரும் ஈரோடு கரூர் ரோட்டில் கணபதி–பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே வரும்போது அதே ரோட்டில் பின்னால் வேகமாக வந்த கார் மொபட் மீது மோதியது.

    இதில் ஸ்ரீதர், மனோஜ்குமார் இருவரும் கீழே விழுந்தனர். மனோஜ்குமார் பின்தலையில், முகத்தில் பலத்த அடிபட்டும் மூக்கிலும், காதிலும் ரத்தம் வந்தது.

    ஸ்ரீதருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.  அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து உள்ளார்கள். 

    அங்கு மனோஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். ஸ்ரீதர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
     
    தகவல் அறிந்து சென்ற மலையம்பாளையம் போலீசார் மனோஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

    மேலும் காரை ஓட்டி வந்து மோதி விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற கொளாநல்லியை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் தனசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×