என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தியும் வயிற்று வலி குணமாகததால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தியும் வயிற்று வலி  குணமாகததால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு மாவட்டம் சதுமுகை பள்ளிகூட தோட்டம் பகுதியை சேந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மனைவி ராஜம்மாள் (50). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ராஜம்மாளுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜம்மாள் மருத்து வமனைக்கு செல்லாமல் கோவிலுக்கு சென்று வயிறு வலி சரியாக பல நேர்த்திக்கடன்களை செய்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜம்மாள், வீட்டின் மேல் தளத்திற்கு சென்று, தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில், ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். 
    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் நாளை முதல் 2 நாட்கள் கடையடைப்பு ேபாராட்டம் அறிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் நாளை முதல் 2 நாட்கள் கடையடைப்பு ேபாராட்டம் அறிவித்துள்ளனர்.


    ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ்  அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் நாளை (திங்கட்கிழமை) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், சூரம்பட்டி விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், சென்னிமலை விசைத்தறியாளர்கள், பனியன் மார்க்கெட் வியாபாரிகள், தமிழ்நாடு சைசிங் மில் ஓனர்ஸ் அசோஷியேஷன், ஸ்கிரீன் பிரின்ட் அசோசியேசன், கைத்தறி துண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் கடையடைப்பு போரா ட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தினர். 
    இதுகுறித்து ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    நூல் விலை உயர்வால் ஜவுளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு நாட்கள் கடையடைப்பு போரா ட்டத்தில் ஜவுளி சந்தை கடைகளும் அடைக்கப்படும். ஜவுளி சந்தையில் 280 தினசரி கடைகளும், 780 வாரசந்தை கடைகளும், அசோகபுரத்தில் 2000 கடைகள், டி.வி.எஸ் வீதியில் 150 கடைகள், சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்டில் 1500 கடைகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.

    ஈரோடு மாநகரில் இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும். இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    பெருந்துறை அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவரில் சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    சென்னை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன்(40). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், அவரது குடும்பத்தினர், உறவினர்களான திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 26 பேருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நேற்று முன்தினம் சென்னை வடபழனியில் இருந்து வேனில் புறப்பட்டுள்ளனர். வேனை சென்னை பாடி கலைவாணர் நகர் வீதியை சேர்ந்த மோகன் தாமோதரன்(30) என்பவர் ஓட்டி வந்தார். முன்னதாக கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர், நேற்று இரவு அங்கிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல திட்டமிட்டு, பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.

    இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக மோதி, கவிழ்ந்தது.

    வேனில் இருந்த குழந்தைகள், பெரியவர்களில் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், வெங்கடகிருஷ்ணன்(40), அவரது மகள் சம்யுக்தா(5), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் அஷ்வந்த்(25), அதேமாவட்டம் வந்தவாசியை சேர்ந்த சாமியார் மகள் சுருதி(23), சரிகா(15), விக்னேஷ்(10), மோகனசுந்தரம் மனைவி சாந்தி(47), இவரது மகன் கவின்குமார்(29), சிவக்குமார் மனைவி கண்ணம்மாள்(45), துரைசாமி மனைவி ஆதிலட்சுமி(65), சென்னை எஸ்ஐ காலனியை சேர்ந்த ஆனந்த் மனைவி ஹேமலதா(39), அவரது மகள் சுமித்ரா(12), பார்த்தசாரதி மனைவி மணி(70), சங்கர் மகன் சித்தார்த்(6), முருகன் மனைவி சுமதி(45) ஆகிய 15பேர் படுகாயம் அடைந்தனர். 

    அவர்களை போலீசார் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் 2 நாட்கள் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னிமலை:

    நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் 2 நாட்கள் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


    சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அவரச கூட்டம் தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது. 

    சங்க கூட்டத்தில் கடுமையான வரலாறு காணாத மிக அதிக நூல் விலை உயர்வை கண்டித்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நாளை  (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னிமலை பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த முழு வேலைநிறுத்தத்திற்கு சாயச்சாலை, பெட்ஷீட் உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் பொன். ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் செளந்திரராஜன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
    மொடக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி இட்கோறை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (21). இவர் கடந்த 2 மாதமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் பகுதியிலுள்ள தனது அத்தை ஜெயந்தி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்செல்வன் செல்போனில் யாரிடமோ பேசி கொண்டு வெளியே சென்றார். பின்னர் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள்  தமிழ் செல்வனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். 

    இந்நிலையில் அத்தை வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு தோட்ட கிணறு மேட்டில் தமிழ்ச்செல்வனின் சட்டையும், செல்போனும் இருந்தது தெரியவந்தது. தமிழ்செல்வன் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும், மொடக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    அதன்படி மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடியபோது தமிழ்செல்வன் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் விசாரணையில் தமிழ்செல்வன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எந்த காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை பகுதி கைத்தறி சங்கத்தில் கைத்தறி துறை செயலாளர், துணி நூல் ஆணையர் ஆய்வு செய்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை பகுதி கைத்தறி சங்கத்தில் கைத்தறி துறை செயலாளர், துணி நூல் ஆணையர் ஆய்வு
    செய்தனர்.

    சென்னிமலையில் செயல்படும் சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 600 உறுப்பினர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு பெட்ஷீட், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி இரகங்கள், துண்டுகள் மற்றும் தலையணை உறை உள்ளிட்ட கைத்தறி ரகங்களை  நெசவு செய்து வருகின்றனர். 

    இந்த சென்கோப்டெக்ஸ் சங்கத்திற்கு கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ 1.20 கோடி மதிப்பில் சென்னிமலையில் கட்டி முடிக்கப்பட்ட  நவீன காட்சியறையுடன் கூடிய சரக்கு இருப்பு கட்டிடத்தை அரசு செயலாளர்  தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் ஆணையர் எம்.வள்ளலார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 

    மேலும்,  சங்க தொழிற்கூடத்தில் நெசவு நெய்து வரும் நெசவாளர்க–ளிடம் குறைகளை கேட்டறிந்தர். இச்சந்திப்பின் போது நெசவாளர்கள் தங்களுக்கு வாரம் ஒரு முறை நெசவு கூலியினை ரூ 1500-க்கு மேற்பட்ட கூலியை வங்கியில் செலுத்து முறையை மாற்றி  வாரம் இரண்டு முறை ரொக்கமாக வழங்க வேண்டும், முதியோர் ஓய்வூதிய தொகை கால தாமதம் இன்றி மாதம் இரண்டாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் பள்ளி சீருடை ரகத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். 

    கோ–ஆப்டெக்ஸ் மூலம் சங்க ஜவுளிகளை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். 
    இந்த சந்திப்பின் போது கலெக்டர் கிருஷ்ணண்ணுண்னி,  கைத்தறி உதவி இயககுனர் சரவணன், துணி நூல் துறை அதிகாரிகள், உதவி இயக்குநர் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை அதிகாரிகள், சங்க தலைவர் திருநாவுகரசு, மேலாண்மை இயக்குநர் நடராஜன், ஆகியோர் உடனிருந்தனர்.

     சென்கோப்டெக்ஸ் சங்கத்தினை பார்வையிட்ட அதிகாரிகள் காளிக்கோப் டெக்ஸ் சங்கத்திலும் புதிய கட்டிடத்தினையும், புதிய வடிவமைப்புகளையும் பார்வையிட்டனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரூ.6 ஆயிரம் கடனுக்காக தொழிலாளியை கட்டி வைத்து தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தளுவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (42). அதே பகுதியை சேர்ந்தவர் வசந்தி. இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராசாம்பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு, வசந்தியிடம் இருந்து சண்முகம் ரூ.6 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தார். இதை திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சண்முகம் சாலைப் புதூரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது காரில் தளுவம்பாளையத்தை சேர்ந்த தர்மலிங்கம், வசந்தியின் மகன் பிரவீன், மற்றும் சக்திவேல் ஆகியோர் வந்தனர். அவர்கள் சண்முகத்தை காரில் ஏற்றி கொண்டு தளுவம்பாளையம் சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் சண்முகத்திடம் வசந்தி கொடுத்த பணத்தை சிலம்பரசனிடம் இருந்து ஏன் திரும்ப வாங்கி தரவில்லை என்று கூறி அவரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சண்முகத்தின் மனைவி மாரியம்மாள் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் என் கணவர் சண்முகத்தை காரில் தூக்கிச் சென்று பிரவீன், தர்மலிங்கம் ஆகியோர் கட்டி வைத்து கயிறு, கட்டையால் தாக்கி உள்ளனர். அங்கிருந்து தப்பித்து என் கணவர் வந்து விட்டார்.

    இது குறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தோம். அங்கேயும் தர்மலிங்கம், பிரவீன் ஆகியோர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி என் கணவர் சண்முகத்தை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். எங்கு சென்றாலும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    அந்தியூர்:

    அந்தியூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் 18 வார்டுகள் உள்ளது. மேலும் பஸ் நிலையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, சென்னை பேரூராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில் வாரத்தில் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த சுகாதார பணிகள் பேரூராட்சி பகுதிகளில் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதனைத்தொடர்ந்து இன்று அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், செல்லீஸ்வரர் கோவில், அழகுராஜ பெருமாள் கோவில் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதி, தாலுகா அலுவலகம், தவிட்டுபாளையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம். மஞ்சள் பையை பயன்படுத்துவோம். சுற்று ச்சூழலை பாதுகாப்போம். நாம் வசிக்கின்ற பகுதியை தூய்மையாக வைத்து கொள்வோம். மரம் நடுவோம், மழை பெறுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடந்தது.

    இதில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்தம் முகமது மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
    சென்னிமலை:

    நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.


    நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கணக்கெடுப்பது வழக்கம். 

    அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    அதன்படி சென்னி மலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர் ரோடு, வெள்ளோடு ரோடு,  ஊத்துக்குளி ரோடு, மற்றும் கொடுமணல் ரோடு ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த 12 பணியாளர்கள் இரவு, பகலாக கடந்த 5 நாட்களாக வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சாலைகளில் செல்லும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகன ங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர். சென்னிமலை - காங்கேயம் செல்லும் மெயின் ரோட்டில் மட்டும் 15 நிமிடத்தில் சுமார் 600 வாகனங்கள் சாலையில் செல்வதாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலத்தில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சத்தியமங்கலத்தில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் அடுத்த மேட்டு நாசுவம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவர்களது மகள் திரிஷா (16) பவானி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் திரிஷா நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். தொடர்ந்து திரிஷா தனது அம்மாவுக்கு போன் செய்து தன்னை தேட வேண்டாம் என கூறி போனை அனைத்து வைத்து விட்டார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் திரிஷாவை அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
    இது குறித்து கணேசன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் யாழினி (16). இவர் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காைல தேர்வு எழுதுவதற்காக யாழினியை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து சென்றார். பள்ளி நுழைவு வாயில் பகுதியில் அவரை விட்டு விட்டு சென்றார். தேர்வு முடிந்து மதியம் நீண்ட நேரமாகியும யாழினி வரவில்லை.

    இதையடுத்து விஜயகுமார் பள்ளிக்கு சென்று தனது மகள் குறித்து விசாரித்தார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என  தெரிய வந்தது. யாழினியை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து விஜயகுமார் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
    பவானிசாகர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் அருகே உள்ள புங்கார் காலனியை சேர்ந்தவர்கள் கவுரி சங்கர் (19), ரங்கசாமி (19). கட்டிட கூலி வேலை செய்து வருகிறார்கள்.  

    நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து கவுரி சங்கர், ரங்கசாமி ஆகியோர் ேமாட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அப்போது அவர்கள் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு பவானிசாகர்-பண்ணாரி சாலையில் காமராஜர் நகர் பாலத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது. 

    இதை பார்த்த கவுரிசங்கர், ரங்கசாமி ஆகியோர் கார் நம் மீது மோதி விடும் என்று கருதி பாலத்தில் இருந்து 20 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே குதித்தனர்.

    இதில் அவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்க கவுரிசங்கரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து–விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த ரங்க–சாமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×