search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு சுவரில் சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்தது
    X
    தடுப்பு சுவரில் சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்தது

    பெருந்துறை அருகே தடுப்பு சுவரில் சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்தது- 15 பேர் படுகாயம்

    பெருந்துறை அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவரில் சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    சென்னை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன்(40). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், அவரது குடும்பத்தினர், உறவினர்களான திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 26 பேருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நேற்று முன்தினம் சென்னை வடபழனியில் இருந்து வேனில் புறப்பட்டுள்ளனர். வேனை சென்னை பாடி கலைவாணர் நகர் வீதியை சேர்ந்த மோகன் தாமோதரன்(30) என்பவர் ஓட்டி வந்தார். முன்னதாக கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர், நேற்று இரவு அங்கிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல திட்டமிட்டு, பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.

    இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக மோதி, கவிழ்ந்தது.

    வேனில் இருந்த குழந்தைகள், பெரியவர்களில் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், வெங்கடகிருஷ்ணன்(40), அவரது மகள் சம்யுக்தா(5), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் அஷ்வந்த்(25), அதேமாவட்டம் வந்தவாசியை சேர்ந்த சாமியார் மகள் சுருதி(23), சரிகா(15), விக்னேஷ்(10), மோகனசுந்தரம் மனைவி சாந்தி(47), இவரது மகன் கவின்குமார்(29), சிவக்குமார் மனைவி கண்ணம்மாள்(45), துரைசாமி மனைவி ஆதிலட்சுமி(65), சென்னை எஸ்ஐ காலனியை சேர்ந்த ஆனந்த் மனைவி ஹேமலதா(39), அவரது மகள் சுமித்ரா(12), பார்த்தசாரதி மனைவி மணி(70), சங்கர் மகன் சித்தார்த்(6), முருகன் மனைவி சுமதி(45) ஆகிய 15பேர் படுகாயம் அடைந்தனர். 

    அவர்களை போலீசார் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×