என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் காவலாளி மயங்கி விழுந்து சாவு குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் காவலாளி மயங்கி விழுந்து சாவு குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஈரோடு மோகன் தோட்டம் அடுத்த கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (55).இவரது மனைவி பேபி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

    விஸ்வநாதன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவரது மனைவி வீட்டு வேலை பார்த்து வந்தார். இவர்களது மகளுக்கு திருமணமாகி கணவருடன் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் விஸ்வநாதனுக்கு கடந்த 2 வருடமாக உடல்நிலை சரியில்லாததால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று பேபி கொடுமுடியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த விஸ்வநாதன் ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

     இதுகுறித்த தகவல் பேபிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஸ்வநாதன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு வண்டியூரான் கோவில் வீதி எம்.ஜி.ஆர்.நகரில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியல் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் கருமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்த பாலா என்கிற இப்ராஹிம் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இப்ராஹிம் மீது 2  கொலை வழக்குகள், வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி செய்தது உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இப்ராஹிம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 
    பெருந்துறை அருகே பழுதான கார் டயர் மாற்றும் போது வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே பழுதான கார் டயர் மாற்றும் போது வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் தனது உறவினர் ஒருவரது திருமணத்துக்கு குடும்பத்துடன் கோவா சென்றார்.

    அங்கு இருந்து மீண்டும் அவர் தனது குடும்பத்துடன் காரில் கோவை  வந்து கொண்டு இருந்தார். அவர்கள் பெருந்துறையை அடுத்துள்ள பெத்தா ம்பாளையம் ரோடு பை-பாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரின் பின்புற டயர் பஞ்சர் ஆனது. 
    இதனை சரிசெய்ய ரமேஷ் மற்றும் அவரது மகன் ஜோக் ரிசர்டு (23) உறவினர் ஜோஸ் (21) ஆகியோர் கீழே இறங்கி வண்டியை சுற்றி கற்களை வைத்து டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிடோர் வேன்  ஜோக் ரிச்சர்ட் மற்றும் ஜோஸ் ஆகியோர்  மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஜோக் ரிச்சர்ட் மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும்  மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோக் ரிச்சர்ட் பரிதாபமாக இறந்தார். 
    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை கோவை மெயின் ரோடு கருக்கன்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செல்லம்மாள் (74). இவர்களது மகள் வசந்தாமணி (57). தாய் மற்றும் மகள் இருவரும் கோவை மெயின் ரோட்டில் இருந்து கருக்கன்காட்டூர் செல்வதற்காக ரோட்டோரம்  நின்று கொண்டிருந்தனர்.

     அப்போது கோவையில் இருந்து பெருந்துறை வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் செல்லம்மாள் மற்றும் வசந்தாமணி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

     அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் இறந்தார். வசந்தாமணி மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி காமராஜ் நகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராமராஜன் (44). இவரது மகன் தமிழ்செல்வன் (21). 
    இவர் கடந்த 2 மாதமாக ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அருகே உள்ள பெரிய வெத்தி பாளையத்தில் தனது அத்தை ஜெயந்தினி  வீட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து  செல்போனில் பேசிக் கொண்டு வெளியே சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  
    இதையடுத்து ஜெயந்தினி அக்கம் பக்கம் தேடி பார்த்தார். அப்போது வீட்டில் அருகே உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்று மேட்டில் தமிழ் செல்வன் சட்டை, செல்போனும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    ர்
    இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தேடினர்.
    அப்போது  தமிழ் செல்வன் கிணற்றில் பிணமாக கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது  உடலை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீசார் தமிழ்செல்வன் உடலைகைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை-2 மகன்கள் கைது செய்யபட்டனர்.
    ஈரோடு:

    பெருந்துறை அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை-2 மகன்கள் கைது செய்யபட்டனர்


    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (36). அதே பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் (40). ஏற்கனவே செல்வன், மார்டினை தாக்கியது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மார்டின் மற்றும் அவரது மகன்கள் ஜீவானந்தம் (25), சூரஜ் (21) ஆகிய 3 பேரும் செல்வனை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததுடன் கத்தியால் குத்தினர்.
    இதையடுத்து செல்வன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், செல்வனை கத்தியால் குத்திய மார்டின், அவரது மகன்கள் ஜீவானந்தம், சூரஜ் ஆகிய 3 பேரையும் காஞ்சிக்கோவில் போலீசார் கைது செய்தனர்.
    கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    திருச்சி காமராஜ் நகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராமராஜன் (44). இவரது மகன் தமிழ்செல்வன் (21). 

    இவர் கடந்த 2 மாதமாக ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அருகே உள்ள பெரிய வெத்தி பாளையத்தில் தனது அத்தை ஜெயந்தினி  வீட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து  செல்போனில் பேசிக் கொண்டு வெளியே சென்றார். 

    மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  

    இதையடுத்து ஜெயந்தினி அக்கம் பக்கம் தேடி பார்த்தார்.

    அப்போது வீட்டில் அருகே உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்று மேட்டில் தமிழ் செல்வன் சட்டை, செல்போனும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தேடினர்.

    அப்போது  தமிழ் செல்வன் கிணற்றில் பிணமாக கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது  உடலை மீட்டனர். 

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீசார் தமிழ்செல்வன் உடலைகைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     
    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    இதில் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூரில் சுமார் 10 ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.
    ஈரோடு:

    நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூர், ஈரோட்டில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும் உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    திருப்பூரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.360 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் சரக்கு போக்குவரத்து சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் சரக்கு வாகன இயக்கமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டமும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோடு வெங்கடாசலம் வீதியில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி

    ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் இன்று முதல் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியது.

    நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தை கடைகளும் இன்றும் நாளையும் அடைக்கப்படுகின்றன.

    ஜவுளி சந்தையில் 280 தினசரி கடைகளும், 780 வாரசந்தை கடைகளும், அசோகபுரத்தில் 2 ஆயிரம் கடைகள், டி.வி. எஸ் வீதியில் 150 கடைகள், சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்டில் 1500 கடைகள் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.

    ஈரோடு மாநகரில் இந்த போராட்டத்தில் பங்கேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, என்.எம்.எஸ் காம்பவுண்ட், அகில்மேடு வீதி, காமராஜர் வீதி ராமசாமி வீதி போன்ற பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் நூல் உயர்வை கண்டித்து 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் குறித்த நோட்டீஸ்கள் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கிளாத் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சங்கத்தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:

    கடந்த 18 மாதங்களாகவே நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளி தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. கிட்டத்தட்ட கடந்த 18 மாதங்களில் நூல் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 40ம் நம்பர் நூல் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் 30ம் நம்பர் நூல் ஒரு கிலோ ரூ.170க்கு விற்கப்பட்டு வந்தது தற்போது ரூ.330 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் 20ம் நம்பர் நூல் ஒரு கிலோ ரூ.140க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.240 ஆக உயர்ந்துவிட்டது. நூல் விலை 2 மடங்காக உயர்ந்து விட்டதால் ஜவுளி மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரே தீர்வு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை விதிக்க வேண்டும்.

    பஞ்சை அத்திவாசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் கொள்ளை
    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 3-வது வீதியை சேர்ந்தவர் முனுசாமி. கட்டிட மேஸ்திரி. இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் இன்று காலை முனுசாமி ஊருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி கொலுசு திருடு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் 7-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதேபோல் அதே நாளில் 9-வது வீதியில் தபால் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையும், 15 ஆயிரம் பணமும் திருட்டுப்போய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்தை தீவிர ப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நம்பியூர் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வு காரணமாக 2 நாள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
    நம்பியூர்:

    நம்பியூர் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வு காரணமாக 2 நாள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, கெட்டிசெவியூர், வேடைக்காரன்கோவில், கொளப்பலூர், அரசூர், கடத்தூர், கூடக்கரை குருமந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக கடுமையான நூல் விலையேற்றம் இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த கோரி 2 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதுகுறித்து நம்பியூர் வட்டார தையல்  உரிமையாளர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நாங்கள் திருப்பூர் பகுதியில் பெரிய நிறுவனங்களிடம் இருந்து பனியன் துணிகளை மொத்தமாக எடுத்து துணி வெட்டி, தைத்து, அயர்ன், பேக்கிங் செய்து விற்பனைக்கு தயார் செய்து கொடுத்து வருகிறோம்.
    தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு, தையல் நூல் விலை உயர்வு காரணத்தினால் எங்களது தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். உடனடியாக அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×