என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நூல் விலை உயர்வு காரணமாக 2 நாள் வேலை நிறுத்தம்
நம்பியூர் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வு காரணமாக 2 நாள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
நம்பியூர்:
நம்பியூர் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வு காரணமாக 2 நாள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, கெட்டிசெவியூர், வேடைக்காரன்கோவில், கொளப்பலூர், அரசூர், கடத்தூர், கூடக்கரை குருமந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக கடுமையான நூல் விலையேற்றம் இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த கோரி 2 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நம்பியூர் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
நாங்கள் திருப்பூர் பகுதியில் பெரிய நிறுவனங்களிடம் இருந்து பனியன் துணிகளை மொத்தமாக எடுத்து துணி வெட்டி, தைத்து, அயர்ன், பேக்கிங் செய்து விற்பனைக்கு தயார் செய்து கொடுத்து வருகிறோம்.
தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு, தையல் நூல் விலை உயர்வு காரணத்தினால் எங்களது தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். உடனடியாக அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






