என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கட்டிட மேஸ்திரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் கொள்ளை
ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் கொள்ளை
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 3-வது வீதியை சேர்ந்தவர் முனுசாமி. கட்டிட மேஸ்திரி. இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் இன்று காலை முனுசாமி ஊருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி கொலுசு திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் 7-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதேபோல் அதே நாளில் 9-வது வீதியில் தபால் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையும், 15 ஆயிரம் பணமும் திருட்டுப்போய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்தை தீவிர ப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






