என் மலர்
ஈரோடு
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு:
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் இன்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில தலைவர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிலுவையில் உள்ள 20 ஆயிரம் மனுக்கள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 70 வயது மேற்ப்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் 3 சதவீத அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர் நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சிவகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் ஆயக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 38). இவரது மனைவி தங்காத்தாள். நடராஜ் தேங்காய் உரிக்கும் வேலை பார்த்து வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜ் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று இரவு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக நடராஜ் கூறினார். பின்னர் நடராஜ் அவரது மனைவி அனைவரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு அவரது மனைவி கழிப்பறைக்கு வந்தபோது நடராஜ் கழிப்பறையில் மயங்கி கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு நடராஜ் விஷம் அருந்தி உள்ளதால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை அருகே வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் அசரப்அலிமுல்லா (வயது 28). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் பெருந்துறை அருகே உள்ள பணிக்கும்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு அருகே உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் வீடு கட்டுவது தொடர்பாக அவருக்கும் அவரது தம்பி மற்றும் குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மனைவி மற்றும் மகளை மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பினார். அசரப்அலிமுல்லா மட்டும் பணிக்கம்பாளையத்தில் தங்கியிருந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தார்.
குடும்ப பிரச்சனை அதிகமாகவே மன உளைச்சலுடன் காணப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்றவர் காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அசரப்அலிமுல்லா வீட்டிற்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அந்தியூர் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
அந்தியூர் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (40). இவரது மனைவி புட்டியம்மாள். மாதவன் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி மாதவன் மாடுகளை கொண்டு செல்ல கூலி வேலைக்கு சென்று உள்ளார். இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்த தகவல் தெரியவில்லை.
இந்நிலையில் பர்கூர் கிராமம் அருகே உள்ள குட்டையூர் மக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாலாற்றில் மாதவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தன்று மாதவன் குடிபோதையில் அந்த வழியாக வந்த போது தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரது வீட்டிற்கு மின் கம்பத்தில் இருந்து வீடு வரை உள்ள மின்சார வயர்கள் முழுமையாக பழுதடைந்ததால் மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது.
இதுகுறித்து பாப்பாத்தி டி.என்.பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்த நிலையில், பழுதடைந்த மின்சார வயர்களை அகற்றிவிட்டு புதிய வயர்களை பொருத்துவதற்காக கொங்கர்பாளையம் பகுதி மின்வாரிய வயர்மேன் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (43), அம்மாப்பேட்டை பி.கே.புதூரை சேர்ந்த விசுவநாதன் (32) ஆகியோர் கொங்கர்பாளையம் சென்றனர்.
பின்னர் கொங்கர்பாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்து விட்டு 2 பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 3 வயர்களை இணைப்பு கொடுத்தவுடன் சக்திவேல் டிரான்ஸ்பார்மரை இயக்க செல்லும் முன்பு விரைவில் மின் இணைப்பை கொடுத்து விட்டு கீழே இறங்குமாறு விசுவநாதனிடம் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.
அப்போது ஸ்வநாதனும் சிறிது நேரத்தில் இணைப்பு கொடுத்து விடுவதாகவும், சிறிது நேரத்திற்கு பிறகு மின் இணைப்பை வழங்கலாம் என கூறி விட்டு மின் கம்பத்தின் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.
அதனை தொடர்ந்து விஸ்வநாதன் மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கி விட்டதாக நினைத்த சக்திவேல், டிரான்ஸ்பார்மரை ஆன் செய்தார். இதில் மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டு இருந்த விஸ்வநாதன் மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் மீதே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதை பார்த்து கொண்டு இருந்த பாப்பாத்தி, விஸ்வநாதன் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுவதை பார்த்து சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து வயர்மேன் சக்திவேலிடம் இது குறித்து கூறி மின்சாரத்தை துண்டித்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மின் கம்பத்தில் சடலமாக தொங்கி கொண்டு இருந்த விஸ்வநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசனூர் வனப்பகுதியில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வபோது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், சாலையை கடந்து செல்வதும் வழக்கம். இன்னும் சில நேரங்களில் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
எதைப்பற்றியும் கவலைப்படாத காட்டுயானை சிறிது நேரம் சாலையில் உலா வந்தது. பின்னர் வனப்பகுதிக்குள் மீண்டும் சென்று விட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையில் காட்டு யானை நடமாடுவதை கண்டால் வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க வேண்டாம் எனவும், செல்போன்களில் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், சூரம்பட்டி விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், சென்னிமலை விசைத்தறியாளர்கள், பனியன் மார்க்கெட் வியாபாரிகள், தமிழ்நாடு சைசிங் மில் ஓனர்ஸ் அசோஷியேஷன், ஸ்கிரீன் பிரின்ட் அசோசியேசன், கைத்தறி துண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் கடையடைப்பு போரா ட்டத்தில் பங்கேற்றுள்ளன.
நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி மத்திய-மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தையில் அடைக்கப்பட்டிருந்தன. இன்று ஜவுளி வார சந்தை ஆகும். இன்று மட்டும் 780 கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, நேபாளம், மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்வது வழக்கம். நூல் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வார ஜவுளி சந்தைகள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. இதுதான் நாளொன்றுக்கு ரூ. 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 2வது நாளாக நூல் உயர்வை கண்டித்து இன்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தையில் அடைக்கப்பட்டிருந்தன. இன்று ஜவுளி வார சந்தை ஆகும். இன்று மட்டும் 780 கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, நேபாளம், மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்வது வழக்கம். நூல் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வார ஜவுளி சந்தைகள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் என்று வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் அசோகபுரத்தில் உள்ள ஜவுளி வாரசந்தை கடைகள், சென்ட்ரல் தியேட்டர் அருகே போடப்படும் ஜவுளி வார சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதை அறியாமல் இன்று வாரச்சந்தைக்கு வந்த வெளிமாநில வியாபாரிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையும் படியுங்கள்...ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்
தாளவாடியில் பலத்த மழை எதிரொலி பழுதான சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
தாளவாடியில் பலத்த மழை எதிரொலி பழுதான சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை கொட்டி வருகிறது. இதனால் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி நின்று விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை நீர் அனைத்தும் கர்நாடக மாநிலம் கோலார் அணைக்கு செல்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் தூரல் மழையாக ஆரப்பித்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது தாளவாடி, தொட்டகாஞ்சனூர், சிக்கள்ளி, பாலப்படுக்கை,இக்களூர், நெய்தாளபுரம் மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் ஒடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே உள்ள தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
பின்னர் வெள்ள நீர் வடிந்த பின்னர் சென்றனர். காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற போது அங்குள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் கள ஆய்வு வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் கள ஆய்வு வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி
நடைபெற்றது.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் உள்தரமதிப்பீட்டு மையமும் இணைந்து தொல்லியல் களஆய்வின் வழிமுறைகள் எனும் பெயரில் ஒருநாள் பயிலரங்கத்தை நடத்தியது.
திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான கே.கே.பாலுசாமி தலைமை உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தமிழின் தொன்மையையும் மக்களின் பண்பாட்டு வேர்களையும் அறிந்து–கொள்ள இதுபோன்ற பயிலரங்கங்கள் தொடர்ந்து–நடத்தப்பட வேண்டும், சிந்து–சமவெளியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள்தான் திராவிடப்பண்பாட்டையும், அவர்களின் உயரிய–வாழ்க்கை முறையினையும் உலகறியச் செய்தது.
எனவே தமிழக தொல்லி–யல் ஆய்வுக்களங்கள் பலகண்டறியப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியின் தொடக்க–மாக தமிழ்த்துறைத்தலைவர் கருநல்.பன்னீர்செல்வம் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு.கவிதா நோக்க உரையாற்றி பயிலரங்கத்தைத் தொடங்கிவைத்தார். கல்லூரியின் முதல்வர் சங்கரசுப்பிரமணியம், கல்லூரியின் இயக்குநர் வெங்கடாசலம் வாழ்த்து உரை வழங்கி பேசினர்.
பயிலரங்கத்தில் சிறப்புப்பயிற்றுநராக தொல்லியல் ஆய்வாளரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியருமான ராஜேந்திரன் தொல்லியல் களஆய்வு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளித்தார்.
பெருங்கற்காலத் தமிழ்மக்களின் பண்பாட்டை உணர்ந்து கொள்வதற்கும் உலக அளவில் நிறுவுவதற்கும் இன்னும் இந்த துறையில் மிகஅதிகமாக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் தனது களஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக இளையான்குடி, எட்டிச்சேரி, முனைவென்றி, புல்லுக்கோட்டை, கீழசேவல்பட்டி முதலிய இடங்களில் கிடைத்தத் தொல்லியல் எச்சங்களைப் படக்காட்சிகளுடன் மாணவர்களுக்கு விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியையொட்டி கல்லூரிவளாகத்தல் தொல்லியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களும், பேராசிரியர்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்ற தொல்லியல் சின்னங்களை ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.
தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் செந்தாமரை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சில் பேராசிரியர்களும், மாணவர்களும் பிறகல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் திரளாகக் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கொடுமுடி அருகே அக்னி நட்சத்திரத்தை ஒட்டி பக்தர்கள் இன்று காலை நான்கு மணிக்கு பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கினர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே அக்னி நட்சத்திரத்தை ஒட்டி பக்தர்கள் இன்று காலை நான்கு மணிக்கு பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கினர்.
கொடுமுடி அருகே இச்சிப் பாளையத்தில் இருந்து அக்னி நட்சத்திர பழனி பாதயாத்திரை குழுவினர் பழனிக்கு புறப்பட்டனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை இருந்ததால் 2 ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லவில்லை.
இந்த ஆண்டு சுமார் 150 பேர் நேற்று மதியம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு தாங்கள் கொண்டு சென்ற குடங்களில் காவிரி ஆற்று நீரை நிரப்பி பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் கொடுமுடி மகுடேசுவரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
பின்னர் இச்சிப்பா–ளையம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து மாரியம்மனை வழிபட்டு மாரியம்மன் கோவிலில் தங்கி இன்று காலை நான்கு மணிக்கு பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கினர்.
ஈரோடு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஈரோடு மீரா மொய்தீன் வீதியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பெயர் செந்தில்குமார். எனது கணவர் ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது மேல் உள்ள உயர் அதிகாரி ஒருவர் எனது கணவரிடம் அரசு வேலை வாங்கித் தருகிறேன் உனக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வா என்று கூறினார்.
இதனை நம்பி எனது கணவர் சிலர் அழைத்து வந்து அவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தார். இவ்வாறாக ரூ.10 லட்சம் வரை அந்த மாநகராட்சி அதிகாரியிடம் கொடுத்தார். ஆனால் அந்த அதிகாரி சொல்லியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணமும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் எனது கணவர் உட்பட 7 பேர் தற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்தனர். இதனால் எனது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அந்த அதிகாரியிடம் எனது கணவர் பணத்தை திருப்பி கேட்ட போது அவர் திருப்பி தரவில்லை. நானும் எனது மகனும் அந்த அதிகாரியிடம் பணத்தை கேட்டபோது அவர் எங்களை தரக்குறைவாக பேசினார்.
இந்நிலையில் பணத்தை இழந்தவர்கள் எனது கணவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் தற்கொலை செய்து கொள்வதாக எனது கணவர் போனில் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி ஈரோடு பஸ் நிலையத்தில் வைத்து தனது கணவர் விஷம் குடித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனிலும் மறுநாள் சிகிச்சை பலனின்றி எனது கணவர் இறந்தார்.
தற்போது நான் எனது குழந்தைகளுடன் வாழ வழி தெரியாமல் நிற்கிறேன். எனவே எனது கணவருக்கு வரவேண்டிய பணத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு வேலை வாங்கித் தரவேண்டும். இதற்கு காரணமான அந்த மாநகராட்சி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
பவானி அருகே சாம்பல் ஏற்றி வந்த லாரி ரோட்டோர மரத்தில் மோதியது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானி:
பவானி அருகே சாம்பல் ஏற்றி வந்த லாரி ரோட்டோர மரத்தில் மோதியது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் துணை அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு ஒரு லாரி இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் பவானி அருகே ரோட்டோரம் இருந்த புளியமரத்தின் மீது அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் டிரைவர் கருப்பண்ணன் கால் முறிவு ஏற்பட்டு லாரியின் உள்ளே சிக்கி கொண்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிரைவர் கருப்பண்ணனை உயிருடன் மீட்டனர்.
அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகி ச்சைக்காக தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்.
இதனால் பவானி- மேட்டூர் ரோட்டில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.