என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

    அந்தியூர் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (40). இவரது மனைவி புட்டியம்மாள். மாதவன் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி மாதவன் மாடுகளை கொண்டு செல்ல கூலி வேலைக்கு சென்று உள்ளார். இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்த தகவல் தெரியவில்லை.

    இந்நிலையில் பர்கூர் கிராமம் அருகே உள்ள குட்டையூர் மக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாலாற்றில் மாதவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தன்று மாதவன் குடிபோதையில்  அந்த வழியாக வந்த போது தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×