என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ேராட்டோர மரத்தின் மீது மோதி நிற்கும் சாம்பல் லாரி.
    X
    ேராட்டோர மரத்தின் மீது மோதி நிற்கும் சாம்பல் லாரி.

    சாம்பல் ஏற்றி வந்த லாரி ரோட்டோர மரத்தில் மோதியது

    பவானி அருகே சாம்பல் ஏற்றி வந்த லாரி ரோட்டோர மரத்தில் மோதியது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பவானி:

    பவானி அருகே சாம்பல் ஏற்றி வந்த லாரி ரோட்டோர மரத்தில் மோதியது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் மேட்டூர் துணை அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு ஒரு லாரி இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். 

    அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது.  இதனால் பவானி அருகே ரோட்டோரம் இருந்த புளியமரத்தின் மீது அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

    இதில் டிரைவர் கருப்பண்ணன் கால் முறிவு ஏற்பட்டு  லாரியின் உள்ளே சிக்கி கொண்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜே.சி.பி. எந்திரம் மூலம்  டிரைவர் கருப்பண்ணனை உயிருடன் மீட்டனர்.

    அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகி ச்சைக்காக தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்.

    இதனால் பவானி- மேட்டூர்  ரோட்டில்  3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    Next Story
    ×