என் மலர்
ஈரோடு
தொடர் மழை எதிரொலி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
அந்தியூர்:
தொடர் மழை எதிரொலி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள், ஏரி, குளங்கள், ஓடைகள், தடுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குண்டு குழியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் கொடுமுடி பகுதியில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இங்கு அதிகபட்சமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கொம்பனைப்புதூர் காளிங்கராயன் சைபன் பாலத்தில் குரங்கன் ஓடை பகுதியில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து விட்டு விட்டு மழை பொழிந்தது. இதனால் ஆங்காங்கே பெய்த மழை நீரானது குரங்கன் ஒடைக்கு வந்ததால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றது. இந்த தண்ணீர் ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூரில் காவிரி ஆற்றில் கலக்கின்றது.
இதேபோல் அம்மா பேட்டை, மொடக்குறிச்சி, கொடிவேரி, பவானி, கவுந்தபாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலங்களில் வனவிலங்குகளுக்கும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் முழு கொள்ளளவு 33.5 அடியாகும். கடந்த வாரம் முதல் வரட்டுப்பள்ளம் அணை சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணையில் 30.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.80 அடியாக உள்ளது.மேலும் நேற்று இரவு பர்கூர் மழை சுற்றுவட்டாரப் பகுதிகளில்இரவு முழுவதும் பலத்த மழை பொழிந்தது. இதேபோல் மழை பொழிந்தால் வரட்டுப்பள்ளம் அணை விரைவில் நிரம்பும்.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-19, கொடுமுடி-32, அம்மாபேட்டை-24.8, மொடக்குறிச்சி-21, கொடிவேரி - 15, பெருந்துறை-3, தாளவாடி-5.4, சத்தியமங்கலம்-19, பவானிசாகர்-5.8, பவானி-11, சென்னிமலை-2, கவுந்தப்பாடி-2.2, குண்டேரிபள்ளம்-1.4.
தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாணிக்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னமணி(37). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபகா லமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சின்னமணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று பரிமளா வேலைக்கு சென்று விட்டார் வீட்டில் தனியாக இருந்த சின்னமணி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் விட்டத்தில் தூக்குபோட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். பரிமளா பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
பின்னர் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சின்னமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நசியனூரில் சாராய ஊறல் போட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சித்தோடு:
நசியனூரில் சாராய ஊறல் போட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பவானி அருகே உள்ள நசியனூர் சித்தன் குட்டை கிராமத்தில் சாராய ஊறல் இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நசியனூர் சித்தன் குட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (33) என்பவர் பிளாஸ்டிக் குடத்தில் விஷ நொடியுடன் கூடிய சாராய ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சாராய ஊறலை வைத்து இருந்த குற்றத்திற்காக மூர்த்தியை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி குறித்து போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி குறித்து போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ள ம்பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி தேன்மொழி (47). கோதண்டராமன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இல்லாத போது தேன்மொழி கடையை கவனித்து வந்தார்.
இந்நிலையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு வந்தனர். அப்போது கடையில் தேன்மொழி மட்டும் இருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் தேன்மொழியிடம் தண்ணீர் கேட்டனர்.
அவர் தண்ணீர் எடுக்க திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென தேன்மொழி கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றார். தேன்மொழி தாலிக்கொடியை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன் என சத்தம் போட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைகண்ட அந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். அப்போது தேன்மொழி கடைக்குள் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் உள்ள காண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் சென்றதும், அவர்கள் நகை பறிக்க முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் கால் முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் எலவமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62).இவர் நேற்று காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுப்பிரமணி படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்து கொண்டிருந்தார். பஸ் நெறிக்கல் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் திடீரென பஸ் பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வேதனை தாங்காமல் அலறிய அவரை பஸ்சில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக கடந்த 2020-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வந்திருந்த 2 பேருக்கு கொரோனா பரவியது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் வேகமாக பரவியது. பின்னர் மாவட்டத்தில் 2-ம் அலை ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனால் 2-ம் அலை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் உயிரிழப்பு அதிக அளவில் இல்லை.
பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவரும் கடந்த 4-ந் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு இருந்து வந்தது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு பிறகு நேற்று மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதி த்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து32 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர் மழை காரணமாக தாளவாடி பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், வாழை போன்றவை அழுகி வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தாளவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாளவாடி, அருள்வாடி, பனக்கள்ளி, சிமிட்டகள்ளி, மாதள்ளி, திகனாரை, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, இக்களூர் போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் தாளவாடி சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த கனமழையால் தாளவாடி பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட ஓடைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
காட்டாற்று வெள்ளம் காரணமாக தாளவாடி அடுத்த சிமிட்ட கள்ளியில் இருந்து மாதள்ளி செல்லும் சாலையில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலையில் கும்டாபுரம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது அந்த தரைபாலத்தை மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடக்க முயன்றபோது மழை வெள்ளத்தில் சிக்கினர்.
இதனால் அவர்களால் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நின்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் திகனாரையில் இருந்து கரளவாடி செல்லும் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூசைபுரத்திலிருந்து பீம்ராஜ்நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர் மழை காரணமாக தாளவாடி பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், வாழை போன்றவை அழுகி வருகிறது. இதேபோல் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவில் செய்துள்ளனர். இங்கு மழை நீர் தேங்கி நிற்பதால் மல்லிகைப்பூக்களும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளது. நூற்றுக்கணக்கான வாழை மரங்கள், பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தாளவாடி அடுத்த எரகனகள்ளி அருகே பெளிரங்கா என்ற குளம் 20 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக நிரம்பி உள்ளது. மேலும் தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தடுப்பணைகள் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
மேலும் இந்த மழை நீரானது கர்நாடகா மாநிலம் சிக்கொலா அணையில் வீணாக கலந்தது. இதை தடுக்கும் வகையில் இந்தப் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 81.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,253 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதேப்போல் 2-வது நாளாகவும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தடப்பள்ளிஅரக்கன்கோட்டை பாசனத்திற்காக 400 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 555 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதேப்போல் 2-வது நாளாகவும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,253 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்தார், இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்தார், இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தண்ணீர் குடித்தார்.
அப்போது அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி அங்கேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் பாலசுப்ரமணியம் (60) என தெரிந்தது. ஆனால் அந்த முதியவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரிய வில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி அருகே ரயில்வே நுழைவு பாலம் தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே ரயில்வே நுழைவு பாலம் தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு கரூர் ரோட்டில் தினமும் பஸ், லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
ஈரோடு கரூர் மெயின் ரோட்டில் கேட் புதூர் அருகே ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலத்தில் உயரமான பாரம் ஏற்றி வரும் லாரிகள் பாலத்தில் மோதாமல் இருக்க பாலத்திற்கு முன்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் இருந்து தவிடு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி ரெயில்வே நுழைவு பாலத்தில் செல்ல முயன்றது. அப்போது அதிக உயரமான இருந்ததால் தடுப்புக் கம்பியில் லாரி சிக்கிக் கொண்டது.
அந்த லாரியை வெளியே எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நிறுத்தப்ட்டன. ஒரு சில வாகனங்கள் மட்டுமே சென்றன. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ெரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் லாரியை ஓரமாக நிறத்தி போக்குவரத்தை சீர் படுத்தினர்.
சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதில் 3-வது மகள் சுஜீத்ரா (24). கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ந் தேதி சத்தியமங்கலம் அடுத்த பெரிய குளத்தைச் சேர்ந்த குமார் என்பவருடன் சுஜீத்ராவுக்கு திருமணம் நடந்தது. குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சந்தோசமாக சென்றுக்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கை செல்போன் மூலம் புயல் வீச தொடங்கியது. சுஜீத்ரா அடிக்கடி செல்போனில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.
இதனை குமார் கண்டித்துள்ளார். மேலும் தனது மாமியாரிடம் இந்த விவகாரம் குறித்து கூறி மகளுக்கு புத்திமதி கூற வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சாந்தா செல்போனில் பேசுவதை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் சுஜீத்ரா செல்போனில் பேசியுள்ளார். அப்போது குமார் கண்டித்துள்ளார். பின்னர் குமார் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த சுஜீத்ரா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுஜீத்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பி பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பி பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,844 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 300 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 455 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.