என் மலர்
ஈரோடு
அந்தியூர் அருகே 1 மாதமாக மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே 1 மாதமாக மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் அடுத்த தேவர்மலை, புட்டப்பனூர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறை சார்பில் இப்பகுதியில் மின்கம்பம் அமைத்தனர். இதில் மின்விளக்கும் பொருத்தப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட மின்விளக்கு ஆரம்பத்தில் எரிந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் மின் கம்பத்தில் இருந்த மின் விளக்கு திடீரென பழுதாகி எரியவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருட்டாக காணப்படுகிறது. இதையடுத்து பழுதடைந்த மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தனர்.
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படு கிறது. இதை சரி செய்ய வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, இந்த பகுதியில் அமைக்கப்பட்ட மின் விளக்கு தொடர்ந்து 1 மாதமாக எரியாமல் உள்ளது. இங்கு வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் இருட்டாகி விடுகிறது. இருட்டில் செல்லும் பொதுமக்களை வனவிலங்குகள் தாக்கி விடுமோ? என்கிற அச்சத்திலேயே சென்று வரவேண்டியது உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வருவ தில்லை. காலையில் தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் பழுதான மின் விளக்கை சரி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலவிளக்கு கிராமம் கோவில்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால் குரங்கன் ஓடை தரைப்பாலம் மூழ்கியது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலவிளக்கு கிராமம் கோவில்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால் குரங்கன் ஓடை தரைப்பாலம் மூழ்கியது.
முகாசி அனுமன் பள்ளியில் தொடங்கி அவல்பூந்துறை எழுமாத்தூர், பாண்டிபாளையம், கோவில்பாளையம் வழியாக ஊஞ்சலூர் அருகே காவிரியில் கலக்கும் குரங்கன் ஓடை கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் ஓடையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக ஓடையில் நீர்வரத்து இருந்து வந்தது. நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விடாமல் மழை பெய்தது.
இதனால் குரங்கு ஓடையில் நீர்வரத்து அதிகரித்தது. கோவில் பாளையம் என்ற இடத்தில் தரைப்பாலம் நீரில் மூழ்கி முழங்கால் அளவு தண்ணீர் பாலத்திற்கு மேல் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் பாலத்தை கடந்து சென்று செல்கின்றனர்.






