என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மயங்கி விழுந்து முதியவர் சாவு

    சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்தார், இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்தார், இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு  சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தண்ணீர் குடித்தார். 

    அப்போது அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி அங்கேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் பாலசுப்ரமணியம் (60) என தெரிந்தது. ஆனால் அந்த முதியவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரிய வில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×