என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு கம்பி லாரி மீது விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    தடுப்பு கம்பி லாரி மீது விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    ரயில்வே நுழைவு பாலம் தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது

    மொடக்குறிச்சி அருகே ரயில்வே நுழைவு பாலம் தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே ரயில்வே  நுழைவு பாலம் தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஈரோடு கரூர் ரோட்டில் தினமும் பஸ், லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

    ஈரோடு கரூர் மெயின் ரோட்டில் கேட் புதூர் அருகே ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலத்தில் உயரமான பாரம் ஏற்றி வரும் லாரிகள் பாலத்தில் மோதாமல் இருக்க பாலத்திற்கு முன்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் இருந்து தவிடு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி ரெயில்வே நுழைவு பாலத்தில் செல்ல  முயன்றது. அப்போது அதிக உயரமான இருந்ததால் தடுப்புக் கம்பியில் லாரி சிக்கிக் கொண்டது.

    அந்த லாரியை வெளியே எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. 

    இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நிறுத்தப்ட்டன. ஒரு சில வாகனங்கள் மட்டுமே சென்றன. இதனால் அந்த பகுதியில்  சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த ெரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் லாரியை ஓரமாக நிறத்தி போக்குவரத்தை சீர் படுத்தினர்.

    Next Story
    ×