என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

    இதில் 3-வது மகள் சுஜீத்ரா (24).  கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ந் தேதி சத்தியமங்கலம் அடுத்த பெரிய குளத்தைச் சேர்ந்த குமார் என்பவருடன் சுஜீத்ராவுக்கு திருமணம் நடந்தது. குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சந்தோசமாக சென்றுக்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கை செல்போன் மூலம் புயல் வீச தொடங்கியது. சுஜீத்ரா அடிக்கடி செல்போனில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.

    இதனை குமார் கண்டித்துள்ளார். மேலும் தனது மாமியாரிடம் இந்த விவகாரம் குறித்து கூறி மகளுக்கு புத்திமதி கூற வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சாந்தா செல்போனில் பேசுவதை கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் சுஜீத்ரா செல்போனில் பேசியுள்ளார். அப்போது குமார் கண்டித்துள்ளார். பின்னர் குமார் வெளியே சென்றுவிட்டார்.  அப்போது வீட்டில் இருந்த சுஜீத்ரா திடீரென தூக்குபோட்டு கொண்டார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுஜீத்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×