என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொல்லியல் கண்காட்சியை ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் கே.கே.பாலுசாமி பார்வையிட்ட காட்சி.
தொல்லியல் கள ஆய்வு வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் கள ஆய்வு வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் கள ஆய்வு வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி
நடைபெற்றது.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் உள்தரமதிப்பீட்டு மையமும் இணைந்து தொல்லியல் களஆய்வின் வழிமுறைகள் எனும் பெயரில் ஒருநாள் பயிலரங்கத்தை நடத்தியது.
திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான கே.கே.பாலுசாமி தலைமை உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தமிழின் தொன்மையையும் மக்களின் பண்பாட்டு வேர்களையும் அறிந்து–கொள்ள இதுபோன்ற பயிலரங்கங்கள் தொடர்ந்து–நடத்தப்பட வேண்டும், சிந்து–சமவெளியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள்தான் திராவிடப்பண்பாட்டையும், அவர்களின் உயரிய–வாழ்க்கை முறையினையும் உலகறியச் செய்தது.
எனவே தமிழக தொல்லி–யல் ஆய்வுக்களங்கள் பலகண்டறியப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியின் தொடக்க–மாக தமிழ்த்துறைத்தலைவர் கருநல்.பன்னீர்செல்வம் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு.கவிதா நோக்க உரையாற்றி பயிலரங்கத்தைத் தொடங்கிவைத்தார். கல்லூரியின் முதல்வர் சங்கரசுப்பிரமணியம், கல்லூரியின் இயக்குநர் வெங்கடாசலம் வாழ்த்து உரை வழங்கி பேசினர்.
பயிலரங்கத்தில் சிறப்புப்பயிற்றுநராக தொல்லியல் ஆய்வாளரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியருமான ராஜேந்திரன் தொல்லியல் களஆய்வு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளித்தார்.
பெருங்கற்காலத் தமிழ்மக்களின் பண்பாட்டை உணர்ந்து கொள்வதற்கும் உலக அளவில் நிறுவுவதற்கும் இன்னும் இந்த துறையில் மிகஅதிகமாக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் தனது களஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக இளையான்குடி, எட்டிச்சேரி, முனைவென்றி, புல்லுக்கோட்டை, கீழசேவல்பட்டி முதலிய இடங்களில் கிடைத்தத் தொல்லியல் எச்சங்களைப் படக்காட்சிகளுடன் மாணவர்களுக்கு விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியையொட்டி கல்லூரிவளாகத்தல் தொல்லியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களும், பேராசிரியர்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்ற தொல்லியல் சின்னங்களை ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.
தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் செந்தாமரை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சில் பேராசிரியர்களும், மாணவர்களும் பிறகல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் திரளாகக் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Next Story






