என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னி நட்சத்திரத்தை ஒட்டி பாதயாத்திரையாக  பழனி புறப்பட்ட பக்தர்கள்.
    X
    அக்னி நட்சத்திரத்தை ஒட்டி பாதயாத்திரையாக பழனி புறப்பட்ட பக்தர்கள்.

    பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

    கொடுமுடி அருகே அக்னி நட்சத்திரத்தை ஒட்டி பக்தர்கள் இன்று காலை நான்கு மணிக்கு பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கினர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே அக்னி நட்சத்திரத்தை ஒட்டி பக்தர்கள் இன்று  காலை நான்கு மணிக்கு பழனிக்கு பாதயாத்திரையை  தொடங்கினர்.

    கொடுமுடி அருகே இச்சிப் பாளையத்தில் இருந்து  அக்னி நட்சத்திர பழனி பாதயாத்திரை குழுவினர் பழனிக்கு புறப்பட்டனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை  இருந்ததால் 2 ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லவில்லை. 

    இந்த ஆண்டு சுமார் 150 பேர் நேற்று மதியம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு தாங்கள் கொண்டு சென்ற குடங்களில் காவிரி ஆற்று நீரை நிரப்பி பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர்  கொடுமுடி மகுடேசுவரர் கோவிலுக்கு சென்று   வழிபாடு செய்தனர். 

    பின்னர் இச்சிப்பா–ளையம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து மாரியம்மனை வழிபட்டு மாரியம்மன் கோவிலில் தங்கி இன்று காலை நான்கு மணிக்கு பழனிக்கு பாதயாத்திரையை  தொடங்கினர்.

    Next Story
    ×