search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு சைக்கிள் பேரணி"

    • பேரணியில் மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • சாலையில் நின்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி அன்று கடை பிடிக்கப்படுகிறது. உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகின்றது.

    இதனையொட்டி இன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் உலக மனநல விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

    பேரணியில் மனோன்ம ணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு நெல்லை பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து பழைய பேட்டை, காந்திநகர் வழியாக மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகத்தை அடைந்தனர். இந்த பேரணியை நெல்லை டவுன் உதவி கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.

    சைக்கிள் பேரணி நடைபெறுவதையொட்டி பேரணி செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் சாலையில் நின்ற வர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்றனர்.

    ×