என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சென்னிமலையில் 2 நாட்கள் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம் அறிவிப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் 2 நாட்கள் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை:
நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் 2 நாட்கள் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அவரச கூட்டம் தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது.
சங்க கூட்டத்தில் கடுமையான வரலாறு காணாத மிக அதிக நூல் விலை உயர்வை கண்டித்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னிமலை பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு வேலைநிறுத்தத்திற்கு சாயச்சாலை, பெட்ஷீட் உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் பொன். ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் செளந்திரராஜன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Next Story






