என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் நகரசபை அவசர கூட்டத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர் சுமையாபானு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்
12-வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுமையாபானு நகராட்சி தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் அவசர கூட்டம் இன்று காலை நடந்தது.
கூட்டம் நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் 12-வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுமையாபானு நகராட்சி தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனது வார்டுக்குட்பட்ட சி.கே.எஸ். நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்ய கூறி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து குடிநீர் குழாயை சீரமைக்க நேற்று முதல் ஆட்கள் வேலை செய்து வருவதாகவும், வார்டில் உள்ள பிரச்சினைகளை நகராட்சி தலைவர் என்ற முறையில் தெரிவித்தால் உடனடியாக பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் என்று நகராட்சி தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Next Story






