என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மகளிர் தங்கும் விடுதிகள் நடத்த அரசு அனுமதி பெற வேண்டும்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
மகளிர் தங்கும் விடுதிகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவனம் நடத்தும் மகளிர் விடுதி மற்றும் அனைத்து பெண்கள் தங்கி பயிலும் மகளிர் கல்லூரி விடுதிகள் அரசிடம் உரிமம் பெற்று விடுதிகள் இயக்கப்பட வேண்டும்.
மகளிர் விடுதிகள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் அனைவரும் தங்களது கருத்துரு உடன் வருகிற 30-ந் தேதிக்குள் ஈரோடு கலெக்டர் அலுவலக 6-வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தவறும் பட்சத்தில் விடுதிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
முதியோர் இல்லத்தினை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ளதாவர்கள் அனைவரும் தங்களது கருத்துருஉடன் 30-ந்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தின் 6-வது தளத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story






