என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு
வெள்ளோடு அருகே கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 7பவுன் தங்க நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
வெள்ளோடு அருகே கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 7- பவுன் தங்க நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, சிறுவன்காட்டுவலசு பகுதியிலுள்ள மொளிப்பள்ளி அண்ணமார் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் கோவிலுக்குள் சென்று பூசாரியிடம் விபூதி வாங்க ஏராளமான பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றனர். மொடக்குறிச்சி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி செல்வி (வயது 47). இவர் கழுத்தில் 5 பவுன் இரட்டைவட தங்க செயின் அணிந்து இருந்தார். பூசாரியிடம் விபூதி வாங்கிவிட்டு திரும்பி பார்த்தபோது தங்க நகையை காணவில்லை.
இதேபோன்று ஈரோடு கஸ்பாபேட்டை கள்ளகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மனைவி லட்சுமி (வயது 75). இவர்தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் காணவில்லை.
Next Story






