என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுந்தப்பாடி வாரச் சந்தையில் குறைந்த அளவில் விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள்
கவுந்தப்பாடி சந்தையில் வாழைத்தார்கள் விலை உயர்ந்தது
வாரச்சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்ததால் வாழைத்தார் விலை உயர்வு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி:
வாரச்சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்ததால் வாழைத்தார் விலை உயர்வு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி வாரச்சந்தையானது வாரம் தோறும் செவ்வாய் புதன் கிழமைகளில் நடைபெறும்.
சந்தையில் முக்கிய வியாபாரமாக செவ்வாய்க்கிழமை அன்று வாழைத்தார் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதியான பாண்டியன் பாளையம், வேலம்பாளையம், மணியம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம் , பொன்னாச்சி புதூர், பெருந்தலையூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதில் குறிப்பாக பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, கதலி, தேன்வாழை மற்றும் மொந்தன் போன்ற வாழைத்தார்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.மேலும் அண்டை மாவட்டங்களான கரூர் திருச்சி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அதிக அளவில் வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
குறிப்பாக 200 -250 காய்களை கொண்ட பூ வந்தார் ரூ.600, 100 -125 காய்களை கொண்ட செவ்வாழை தார் 300 ரூபாய்க்கும். 75-100 காய்களை கொண்ட ரஸ்தாலி 250 க்கும் விற்கப்பட்டது .
இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகளும் அதிக அளவில் வந்து வாழைத்தார்களை வாங்கிச் செல்வார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக பலத்த சூறாவளி காற்று மற்றும் மழையும் பெய்து வருகிறது. பல்லாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது இதனால் வாரச் சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்து.
அதனால் வாழைத்தார் விலை சென்ற வாரத்தை விட 200, 300 என்று ஒவ்வொரு ரகத்திற்கும் விலை உயர்வு ஏற்பட்டது.
இதனால் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அதிக விலை கொடுத்து குறைந்த எண்ணிக்கையில் வாழைத்தார்களை வாங்கிச் சென்றார்கள்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, அடுத்த மாதம் வரப்போகும் முகூர்த்த காலங்களில் இன்னும் சற்று கூடுதலாக விலை இருக்கும் என்று கூறினார்கள்.
Next Story






