என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரத்தில் குமார சுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரத்தில் குமார சுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    கடந்த 26, 27 ஆகிய 2 நாட்கள் யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 28-ந்தேதி கோபூஜை மற்றும் மாலையில் சிவனடியார் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    29-ந்தேதி சிறப்பு பூஜையும், நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி, திருமலையை சுற்றி வந்து சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது. சிறப்பு பூஜை முடிவடைந்த உடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குமாரசுப்பிர மணியர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை விழா குழுவினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து இருந்தனர்.

    • இதில் அவர்கள் 2 பேரும் கீேழ விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த வர் மாகாளி என்ற மூர்த்தி (வயது 50). கூலி தொழிலாளி.

    இவருக்கு பெரிய அம்மணி என்ற மனைவியும், ரங்கசாமி (27) என்ற மகனும், ரங்கநாயகி (24), ஸ்ரீதேவி (20) என்ற மகளும் உள்ளனர். ரங்கசாமி கோவை விமான நிலையத்தில் தொழிலாளி யாக வேலை செய்து வரு கிறார்.

    இந்த நிலையில் மகாளி யின் மகன் ரங்கசாமிக்கும் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் நேற்று காலை சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடந் தது.

    திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் வேனில் நல்ல கவுண்டன் பாளையத்துக்கு சென்றனர்.

    இதை தொடர்ந்து மாகாளி மற்றும் அவரது மகள் ரங்கநாயகி ஆகிய இருவரும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்து கொண்டு அவர்கள் நேற்று மாலை 2 பேரும் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    மொபட்டை மாகாளி ஓட்டி சென்றார். ரங்கநாயகி அவரது பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் கோபி செட்டிபாளையம் அடுத்த கொடிவேரி பிரிவு அருகே சென்றார்.

    அப்போது மாகாளிக்கு உடல் நிலை சரியில்லாததால் மொபட்டை நிறுத்த முயன்றார். அதற்குள் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் மொபட் விழுந்தது. இதில் அவர்கள் 2 பேரும் கீேழ விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்பு லன்சு மூலம் கோபிடெ்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் கள் மாகாளி ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். இதை தொடர்ந்து ரங்க நாயகி கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
    • மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு . மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று முதல் கீழ் பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 900 கன அடி என மொத்தம் 1,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. 

    • இது குறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சென்னிமலை போலீசார் அஜயை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து அஜயை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே தோப்புப்பாளையம் எம்.பி.என்., காலனியைச் சேர்ந்தவர் கவின்குமார்(23)கவின்குமார் தனது தாய் சாந்தியுடன் கடந்த 21-ந் தேதி சென்னிமலை வார சந்தைக்கு வந்து விட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது மொபட்டை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சாந்தியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டார்.

    அப்போது சங்கிலியை சாந்தி கெட்டியாக பிடித்து கொண்டதால் 1½ பவுன் அளவுள்ள தங்க சங்கிலி மட்டும் மர்ம நபர் பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் அருகே பெருந்தொழுவு ரோடு, அமராவதி நகரை, சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜய் (23) என்பவர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னிமலை போலீசார் அஜயை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து அஜயை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர். 

    • காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது
    • இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    அன்று காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது.

    பின்னர் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து மகா பூர்ணாகுதியும், பின்னர் உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.

    தொடந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை ஐந்து நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    நேற்று மதியம் மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் வைபோகம் நடந்தது. இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேலினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெ ருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

    சென்னிமலை நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டுகளித்தனர்.

    இதில் மேற்கு ராஜ வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜ வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜ வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார்.

    இதேபோல் திண்டல் மலை முருகன் கோவிலிலும் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது.

    இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்க ல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று குதிரை, வீரபாகு சூரன் போன்ற வாகனங்கள் சத்தி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் வழியாக வந்துபவானி சாகர் சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது.

    பின்னர் இரவு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
    • தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலம் அடுத்த தங்க நகரம் என்ற பகுதிக்கு கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தங்க நகரம் என்ற இடத்தில் உள்ள கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் அடிப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக சென்றது. மேலும் வாய்க்காலின் மேல் பகுதியில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்க நகரம் பகுதியில் கீழ்வாய்க்கால் பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பணியாளர்கள் மூலம் குழி மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படாமல் இருக்க முதல் கட்டமாக கிளை வாய்க்கால் அடைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை நீர் வளப்பிரிவு பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உடைப்பை அடைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதைதொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் மேலும் கசியாத வகையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்றதும் குழியை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் குழியை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்த வால்வு சரிசெய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போராட்டத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் 300 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று உள்ளதால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்துள்ளன.
    • மாநகராட்சியில் தினமும் 70 டன் வரை குப்பைகள் சேரும். இன்று துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் என 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து இன்று 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் குறைத்தும், வெளிக்கொணர்வு முகமை மூலம் (அவுட்சோர் சிங்) ஒப்பந்த பணியாளராக ஆக்கும் நகராட்சி நிர்வாக துறையின் அரசாணைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.

    தூய்மை பணியாளர் துப்புரவு மேற்பார்வையாளர், ஓட்டுநர், கணினி இயக்குனர், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு 1.4.2021 முதல் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு அனைத்து தின ஊதிய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் 300 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று உள்ளதால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்துள்ளன. மாநகராட்சியில் தினமும் 70 டன் வரை குப்பைகள் சேரும். இன்று துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களின் முற்றுகை போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார்.
    • தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் நெசவாளர் காலனி சேர்ந்தவர் கார்த்தி (26). இவரது மனைவி பிருந்தா (23).

    இருவரும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராயபாளையத்தில் கார்த்தி, பிருந்தா தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 27-ந்தேதி கார்த்தி திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று இரவு பிருந்தா ஒரு தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உணவு வரவழைத்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார்.

    இந்நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் பிருந்தா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பிருந்தாவின் தாய்க்கும் அவரது கணவர் கார்த்திக்கும் தகவல் கொடுத்தார்கள். அவர்கள் பிருந்தா வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிருந்தா பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மனைவி உடலை பார்த்து கார்த்திக் கதறி அழுதார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இதற்கிடையே பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதை பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிருந்தா எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்வார்கள். தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்ப னைக்கு வந்தன. இங்கு நாளொன்றுக்கு 8 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் இன்று ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை சற்று உயர்ந்திருந்தன.

    சிறிய மீன்கள் கிலோ ரூ. 25 வரையும், பெரிய மீன்கள் கிலோ ரூ.50 வரையும் உயர்ந்திருந்தன.

    இன்று மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-750, சீலா பெரியமீன்-600, சிறிய மீன்-300, சங்கரா-350, அயிலை-200, மத்தி-170, முரல்-300, திருக்கை-400, சின்னராட்டு-300, பெரியராட்டு-500, மெல்ல வவ்வால்-700, இறால்-650, சின்ன இறால் - 500, சுறா-600, நண்டு-600.

    இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது . இதனால் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    • சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

    இதில் 2 கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு யாகம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னிமலையில் நேற்று வினை தீர்க்கும் வேலவன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டது.

    அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது நான்கு ராஜ வீதிகளிலும் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் சென்று சூரர்களை வதம் செய்கிறார்.

    இறுதியில் வான வேடிக்கைகள் முழங்க முருகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதேபோல் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, தலமலை, ஆசனூர் தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் மேக மூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
    • மலைப்பகுதியில் தொடர்ந்து சாலை மழை பெய்வதால் குளிர்ச்சியாக காணப்படு கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக காலை நேரத்தில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மேக மூட்டத்துடன் காணப் பட்டு வருகிறது.

    இதே போல் இன்று காலை ஈரோடு, கோபி செட்டி பாளையம், பெருந் துறை அந்தியூர். சென்னி மலை உள்பட அனைத்து பகுதிகளிலும் மேக மூட்ட த்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி, தலமலை, ஆசனூர் தொட்ட காஜனூர் உள்பட வனப் பகுதிகளில் மேக மூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து வனப்பகுதி களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சிலு, சிலுவென குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் வனப்பகுதி குளிர்ச்சி யாக காணப்படு கிறது.

    மேலும் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியிலும் இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் மலைப பகுதியில் ெதாடர்ந்து சாலை மழை பெய்வதால் குளிர்ச்சியாக காணப்படு கிறது.

    இதே போல் இன்று காலை மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, ஆப்பக்கூடல், அத்தாணி உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதி களிலும் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால மாவட்டத்தில் குளிர் அதிகமாக இருந்தது.

    • அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில் முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈேராடு மாவட்டம் சிவகிரி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில்  முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அவல்பூந்துறை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த திருஞான சம்பத் (52) எனவும் அவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×