என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஏல சீட்டுகள் நடத்தியதில் மொத்தம் ரூ.55 லட்சம் வரை மோசடி செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.
    • புகாரின் பேரில் 2 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை கேட் பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேரும் ரூ.5.லட்சம், ரூ.10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தி வந்துள்ளனர்.

    ஏலச்சீட்டில் மாதந்தோறும் பணம் செலுத்தினால் வட்டியுடன் அதிக லாபம் பெறலாம் என்ற எண்ணத்தில், இவர்களுக்கு அறிமுகமான நண்பர்கள் மூலம் பவானி ராணா நகர் பகுதியை சேர்ந்த வேணி என்பவர் உள்பட 4 பேர் ஏலச்சீட்டில் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் வேணி இதுவரையிலும் ரூ.11 லட்சம் ரூபாய் வரை ஏல சீட்டில் மாதம் தோறும் சீட்டுத் தொகையாக செலுத்தியுள்ளார். ஏலச்சீட்டு முடிந்த பின்னர் ஏல சீட்டு நடத்திய சரவணன் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் பணம் கேட்டபோது முறையான பதில் இல்லாமலும், வேணி ஏலச்சீட்டில் செலுத்திய பணத்தை திருப்பி தராமலும் தாமதம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட வேணி உள்பட 4 பேரும் ஏல சீட்டை நம்பி இழந்த ரூ.11 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கான வட்டி என மொத்த பணத்தையும் மீட்டு தர கோரியும், முருகேசன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மாபேட்டை போலீசில் புகார்கொடுத்தனர். புகாரின் பேரில் 2 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    முருகேசன், சரவணன் ஆகிய 2 பேரும் இதுபோல் பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியதில் மொத்தம் ரூ.55 லட்சம் வரை மோசடி செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்கள் மூலம் ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள் உள்ளிட்டவைகள் சரக்கு லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவா ர்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் செயலாளர் மீது சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தாக்குதலில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சரக்குகள் அனுப்ப முடியாமல் தேங்கி வரு வதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும், நடவடிக்கை எடுக்கா விட்டால் அனைத்து சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    • அந்த வழியாக வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அம்மாபாளையம் பகுதியில் 1,040 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 1,440 கிலோ ரேஷன் அரிசியையும், அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பவானிசாகரை சேர்ந்த கண்ணன் (47) என்பவரை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன.
    • இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவு, இளநிலை பொறியாளர் செந்தாமரை ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீடுகளை இடிப்பதற்கு முன் வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது உடைமைகளை எடுத்து சென்றனர். 5 பொக்லைன் எந்திரன் மூலம் வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    • ஈரோட்டில் வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
    • இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் பெரிய சரக்கு லாரிகள் மூலம் டெல்லி, மும்பை, மகாரா ஸ்டிரா உள்ளிட்ட வடமாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    இதற்காக ஈரோடு பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளி மாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கு வதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களே சுமை தூக்கும் பணியாளர்களை நியமித்துள்ளது.

    இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முன்பணம் மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவை நிறுவனம் வழங்கவில்லை என்று சுமை தூக்கும் தொழிலா ளர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்நடவ டிக்கையை கண்டித்து நேற்று பவானி சாலையில் பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

    இதை கண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் அசோசியேசன் நிர்வாகி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட போவதாக வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்தது.

    அதன்படி ஈரோட்டில் பவானி ரோடு, பார்க்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 100 லாரிகளில் சரக்குகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றது. இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து 50 லாரிகள் ஈரோட்டிற்கு சரக்கு கொண்டு வருகின்றது.

    இப்பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, ஆயில், கெமிக்கல், தானியங்கள் ஆகியவை புக்கிங் செய்யப் படாமல் தேக்கமடை ந்துள்ளது.

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவிகளுக்கு கை மற்றும் கால களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
    • 2 மாணவிகளுக்கும் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் ரோட்டில் நேற்று மாலை ஒரு ஈச்சர் வேன் வந்தது. இந்த வேனை மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் அந்த லாரி கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் இருக்க வேனை டிரைவர் திருப்பினார்.

    அப்போது எதிர் பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவ- மாணவிகள் மீது வேன் மோதியது. தொடர்ந்து வேன் அருகே இருந்த தடுப்பு கல்லை உடைத்து கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    வேன் மோதியதில் கணக்க ம்பாளையத்தை சேர்ந்த 12-ம் மாணவிகள் நந்தினி வித்யா பாரதி (17), கனி மொழி (17) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில் மாணவி நந்தினி வித்யா பாரதிக்கு வலது கை மற்றும் 2 கால்களிலும் எலும்பு முறிவும், கனிமொழிக்கு இடது கால் தொடையில் காயமும், தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதையடுத்து டிரைவர் கண்ணன் தப்பி ெசல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் அவரை மடக்கி பிடித்து பங்களா ப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வேன் டிரைவர் மற்றும் உரிமை யாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேன் டிரைவர் கண்ணன் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவி களுக்கு கை மற்றும் கால களில் எலும்பு முறிவு ஏற்ப ட்டுள்ளது.

    இதையடுத்து 2 மாணவிகளுக்கும் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இங்குமாக திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாளவந்தி நாட்டை சேர்ந்த மதியழகன்(40) என்பது தெரிய வந்தது. மதியழகன் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது.

    அவர் அளித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சங்கரன் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த–ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.
    • இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு ரோடு சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நந்த குமாரின் அப்பா, அம்மா, மற்றும் தாத்தா பழனிச்சாமி (75) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பழனிசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து பழனிச்சாமி கொரோனா சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தார்.

    இதனால் பழனிசாமி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று தொடர்ந்து வீட்டில் இருந்து வருகிறார். இதனால் பழனிச் சாமி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இநத நிலையில் பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நந்தகுமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பழனி ச்சாமியை தேடி வருகிறார்.

    • சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு குட்டை தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவர் சத்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சத்தியா கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகனை அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் வீட்டில் உள்ள ஒரு அறை யில் இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரது உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் மனைவி பிரிந்து சென்றதால் அதிக அளவில் மது குடித்து இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சதீஷ்குமாரின் மனைவி சத்தியாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை நீர் குளம் போல் தேங்கி சாலைகளில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
    • இந்த பகுதியில் உள்ள ஒரு சில குடும்பங்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்ட அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர், நவ. 18-

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள நேரு வீதி, அம்மன் நகர், அழகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையினால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    தற்போது அந்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி சாலைகளில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்தால் தற்போது தேங்கியுள்ள நீர் விரைவில் வடிவதற்கு உண்டான வழிவகை உள்ளதாகவும், இந்த தேங்கியுள்ள நீரால் விஷ பூச்சிகள், கொசு ஆகியவை அதிக அளவில் இந்த குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை மிக அதிகமாக இருப்பதால் இந்த பகுதியில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள ஒரு சில குடும்பங்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்ட அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து புதிய இந்தியா, புதிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சுரேஷ் கூறுகையில், இந்த பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த பகுதி மக்கள் விசபூச்சிகள், கொசுத்தொல்லையினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

    இது தொடர்பாக கலெக்டரிடம் மனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன் காக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • கர்நாடகாவில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி நின்றது.
    • பர்கூர் போலீசார் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகாவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. தற்போது இந்த சாலை விரிவாக்கம் பணி செய்யப்பட்டுள்ளதால் அதிக அளவில் வாகன போக்குவரத்து இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி நின்றது.

    இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து சிறிது தூரம் நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    உனடியாக சம்பவ இடத்திற்கு பர்கூர் போலீசார் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதனால் 2 மணி நேரத்திறத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    • பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடக்கு பெருந்துறை, சிப்காட் வளாகம், சின்ன வேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, கோட்டை மேடு, பெருந்துறை மேற்குபகுதி, சின்னமடத்து பாளையம், பெரியமடத்து பாளையம், லட்சுமி நகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, தாளக்கரை புதூர், பள்ளக்காட்டூர், டி.கே.புதூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர், குன்னத்தூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    ×