மனைவி பிரிந்து சென்றதால் அதிக மது குடித்த வாலிபர் சாவு

சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார்.மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவி பிரிந்து சென்றதால் அதிக மது குடித்த வாலிபர் சாவு
Published on

பவானி:

பவானி அருகே உள்ள சித்தோடு குட்டை தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவர் சத்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சத்தியா கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகனை அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் வீட்டில் உள்ள ஒரு அறை யில் இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சித்தோடு போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரது உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மனைவி பிரிந்து சென்றதால் அதிக அளவில் மது குடித்து இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து சதீஷ்குமாரின் மனைவி சத்தியாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com