search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freight transport companies"

    • இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்கள் மூலம் ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள் உள்ளிட்டவைகள் சரக்கு லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவா ர்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் செயலாளர் மீது சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தாக்குதலில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சரக்குகள் அனுப்ப முடியாமல் தேங்கி வரு வதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும், நடவடிக்கை எடுக்கா விட்டால் அனைத்து சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    • ஈரோட்டில் வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
    • இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் பெரிய சரக்கு லாரிகள் மூலம் டெல்லி, மும்பை, மகாரா ஸ்டிரா உள்ளிட்ட வடமாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    இதற்காக ஈரோடு பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளி மாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கு வதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களே சுமை தூக்கும் பணியாளர்களை நியமித்துள்ளது.

    இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முன்பணம் மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவை நிறுவனம் வழங்கவில்லை என்று சுமை தூக்கும் தொழிலா ளர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்நடவ டிக்கையை கண்டித்து நேற்று பவானி சாலையில் பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

    இதை கண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் அசோசியேசன் நிர்வாகி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட போவதாக வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்தது.

    அதன்படி ஈரோட்டில் பவானி ரோடு, பார்க்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 100 லாரிகளில் சரக்குகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றது. இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து 50 லாரிகள் ஈரோட்டிற்கு சரக்கு கொண்டு வருகின்றது.

    இப்பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, ஆயில், கெமிக்கல், தானியங்கள் ஆகியவை புக்கிங் செய்யப் படாமல் தேக்கமடை ந்துள்ளது.

    ×