என் மலர்
ஈரோடு
- விவசாயி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாக்கை திடீரென கடித்தது.
- அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை அறுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார். இதையடுத்து கணவன் -மனைவி இருவரும் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளனர்.
அந்த ஜோதிடர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றை குறிப்பிட்டு அங்கு உள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவதாகவும், அவரிடம் உள்ள பாம்புக்கு பரிகாரம் செய்தால் பாவங்கள் நீங்கும். உங்கள் கனவில் பாம்பு வராது என்று தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய அந்த விவசாயி கோவில் பூசாரியிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார். அப்போது தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளதாகக் கூறிய அந்த பூசாரி, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யக் கூறினார்.
இதனை நம்பிய விவசாயி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாக்கை திடீரென கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை அறுத்துள்ளார். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறவே அந்த விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அவர் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர் செந்தில் குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளார்.
இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர் செந்தில் குமரன் கூறியதாவது:-
"பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே தவிர மூடநம்பிக்கைகளையும் வீட்டு வைத்தியத்தையும் செய்யக்கூடாது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. செயற்கை சுவாசம் கொடுப்பதில் கடும் சிரமங்களை சந்தித்தோம். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அந்த விவசாயியை உயிர் பிழைக்க செய்துள்ளோம். பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம்."
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பாம்பு கடியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த விவசாயி குணமடைந்து வீடு திரும்பினார்.
- ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு இன்று காலை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் வந்தார்.
- பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார்.
ஈரோடு:
ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு இன்று காலை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் வந்தார். அங்கு போலீசாரின் உபகரணங்களை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்வை யிட்டார். வாகனங்களின் தற்போதைய நிலை, அவற்றின் பராமரிப்பு முறை குறித்து கேட்டறிந்தார். போலீசாரின் வஜ்ரா வாகனங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்து அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பணியிடம் மாறுதல் குறித்தும் அதிகாரிகளுடன் பேசினார்.
பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஐ.ஜி. சுதாகர் வந்தார். அங்கு ரோந்து பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள 6 வாகனங்களை பார்வையிட்டார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், டி.எஸ்.பி. சேகர் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அந்தியூரில் இருந்து தாமரைக்கரை பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலை உள்ளது.
- இந்த பிரதான சாலையில் ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் மற்றும் மண் சாலை ஓரங்களில் ஆங்காங்கே உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து தாமரைக்கரை பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலை உள்ளது.
இந்த மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு ஏற்பட்டு வந்த காரணத்தினால் இந்த பிரதான சாலையில் ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் மற்றும் மண் சாலை ஓரங்களில் ஆங்காங்கே இருப்பதினால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டு சென்று வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மண் சரிவை அகற்றி அந்தப் பகுதிகளில் மீண்டும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
- ஓட்டல்,பேக்கரி, மளிகை கடைகளில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் உள்ள ஓட்டல்,பேக்கரி, பழ முதிர் நிலையங்கள், பேன்சி ஸ்டோர்ஸ், மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த பேன்சி ஸ்டோர், பழமுதிர் நிலையம், உணவகங்களுக்கு தலா ரூ.2,000 வீதம் 5 கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் பாஸ்ட் புட் கடையில் சில்லி சிக்கன், மீன் சில்லிக்கு அதிகமாக கலர் பயன்படுத்தியதற்காக ரூபாய் 1,000 அபராதம் விதித்தனர்.
இந்த அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஸ்டேட் பேங்க் மூலமாகவோ செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அளித்தனர்.
மேலும் இது போன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், பார்சல் கொடுப்பதற்கும் உண்பதற்கும் வாழை இலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பாலித்தீன் பைகளுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்தப்பட வேண்டும், சூடான சாம்பார் ரசம் போன்ற குழம்புகளை சில்வர் கவர் அல்லது அலுமினியம் பாயில் கவரில் கட்டி கொடுக்க வேண்டும் என உணவகங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மளிகை கடைகள், பழமுதிர் நிலையங்கள் போன்ற அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் பொது மக்களுக்கு உணவுப் பொருட்களை போட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
இது போன்று சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
- பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் லாரி வந்த போது எதிரே அந்தியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.
- இதில் 2 லாரி டிரைவர்களுக்கும் காலில் பலத்த காயமடைந்தது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே ராஜன் நகரில் இருந்து புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்கிற ராஜா என்பவர் சம்பவத்தன்று இரவு லோடு ஏற்றிக்கொண்டு பரமத்தி வேலூர் செல்வ தற்காக சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு சுமார் 12.30 மணியளவில் பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் லாரி வந்த போது எதிரே அந்தியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 லாரி டிரைவர்களுக்கும் காலில் பலத்த காயமடைந்தது. இதனையடுத்து உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்க ப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை செய்தனர். இதில் 2 லாரியின் முன்பக்கமும் சேதமானது.
மேலும் அந்தியூரில் இருந்து ஓட்டி வந்த லாரி டிரைவரின் தூக்க கலக்கதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது.
- சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
பவானி:
பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (36). இவர் பவானி-ஈரோடு மெயின் ரோடு காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரில் சொந்தமாக மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த பீடி, சிகரெட், சோப்பு மற்றும் மளிகை பொருட்கள் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் சுடலை புகார் கொடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் நடைபெற்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சித்தோட்டில் மின் பொறியாளர் வீட்டில் முகமூடி கொள்ளையர் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த தங்க நகை, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற பரபரப்பு அடங்கும் முன் காளிங்கராயன பாளையத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் சி.சி.டி.வி. காட்சிகள் பதிவு கொண்டு குற்றவாளிகள் யார் என விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
- வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள குட்டைக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேம்புசாமி (61). இவர் கடந்த 30 வருடங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணாரி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணா –மலை சென்று கொண்டி ருந்தார். அவருடன் கிளீனர் குமார், கணக்காளர் செல்வ–ரத்தினம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவருடன் வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து வேம்புசாமியின் மனைவி கண்ணம்மாள் (57) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இன்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இப்போராட்டத்தினால் அனைத்து திட்ட பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இரவு நேர ஆய்வுகூட்டங்கள் நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகள் உயர் அலுவலர்களால் நடத்தப்படுவதை கைவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலர் முதல் உதவி இயக்குநர் நிலைவரை உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர், தாளவாடி போன்ற 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 732 பேர் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தினால் 100 நாள் வேலைதிட்டம், பாரதபிரதமர் வீடுகட்டும் திட்டம் உட்பட மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து திட்ட பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- மகாலட்சுமி வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து வீடு முன்பு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏரா ளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி வனச்சரகத்து க்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து வருகின்றன.
அங்கு வீடு மற்றும் தோட்டம் முன்பு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற கால்ந டைகளை வேட்டையாடி வருகிறது. காவலுக்காக விடப்பட்டிருக்கும் நாய்களையும் சிறுத்தை விட்டு வைப்பதில்லை.
இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 34). விவசாயி. இவரது வீடு வனப்பகுதியை யொட்டி உள்ளது. இவர் தனது வீட்டின் முன்பு 4 ஆடுகளை கட்டி வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மகாலட்சுமி வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆட்டுக்குட்டி அருகே மர்ம விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது.
உடனே இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து வீடு முன்பு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரியவந்தது.
வனப்பகுதியில் இருந்து மகாலட்சுமியின் வீட்டுக்கு வந்த சிறுத்தை அங்கு வீட்டின் முன்பு கட்டப்ப ட்டிருந்த ஆட்டுக்குட்டியை அடித்து கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டது தெரியவந்தது.
இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வீடுகள் மற்றும் தோட்டங்கள் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு போன்ற கால்நடை களையும், நாய்களையும் வேட்டையாடி வந்தது.
தற்போது மீண்டும் சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பீதியடை ந்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை யினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறை யினர் கால்நடைகளை வேட்ைடயாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இறந்த ஆட்டுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அப்போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கோபிசெட்டிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் தாலுகா பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) என்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
- புளியம்பட்டியில் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் அனுமதியின்றி செயல்பட்டதாக கூறப்படுகிறது.
- இதையடுத்து இந்த பகுதியில் இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் அனுமதியின்றி செயல்பட்ட தாக கூறப்படுகிறது.
இந்த இறைச்சி கடை க்காரர்கள் மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வளாகத்திலேயே கொட்டி விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், மேலும் வெறி நாய்கள் இறைச்சி கழிவுகளை எடுத்துச் சென்று அருகே உள்ள வீட்டின் முன்பு போட்டு விடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்பட உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து இந்த பகுதியில் இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளை நக ராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து பணி யாளர்கள் மேற் கூரைகளை அகற்றி ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
இந்த பகுதிகளில் இருந்த கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வியாபாரி கள் நகராட்சி ஆணையாளர் சையது உசேனை சந்தித்து எங்களுக்கு வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கி கொடுங்கள் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு:
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 10 அம்சகோரி க்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இரவு நேர ஆய்வுகூட்டங்கள் நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகள் உயர் அலுவலர்களால் நடத்தப்படுவதை கைவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலர் முதல் உதவி இயக்குநர் நிலைவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது.
அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர், தாளவாடி போன்ற 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 732 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து இந்த கோரிக்ககைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தினால் 100 நாள் வேலைதிட்டம், பாரதபிரதமர் வீடுகட்டும் திட்டம் உட்பட மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து திட்ட பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
எங்களது கோரிக்கை களை அரசு நிறை வேற்றவில்லை என்றால் வருகின்ற டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






