என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட 15 இறைச்சி கடைகள் அகற்றம்
- புளியம்பட்டியில் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் அனுமதியின்றி செயல்பட்டதாக கூறப்படுகிறது.
- இதையடுத்து இந்த பகுதியில் இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் அனுமதியின்றி செயல்பட்ட தாக கூறப்படுகிறது.
இந்த இறைச்சி கடை க்காரர்கள் மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வளாகத்திலேயே கொட்டி விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், மேலும் வெறி நாய்கள் இறைச்சி கழிவுகளை எடுத்துச் சென்று அருகே உள்ள வீட்டின் முன்பு போட்டு விடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்பட உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து இந்த பகுதியில் இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளை நக ராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து பணி யாளர்கள் மேற் கூரைகளை அகற்றி ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
இந்த பகுதிகளில் இருந்த கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வியாபாரி கள் நகராட்சி ஆணையாளர் சையது உசேனை சந்தித்து எங்களுக்கு வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கி கொடுங்கள் என கோரிக்கை மனு கொடுத்தனர்.






