என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "It was decided to cage"

    • மகாலட்சுமி வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து வீடு முன்பு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏரா ளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச்சரகத்து க்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து வருகின்றன.

    அங்கு வீடு மற்றும் தோட்டம் முன்பு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற கால்ந டைகளை வேட்டையாடி வருகிறது. காவலுக்காக விடப்பட்டிருக்கும் நாய்களையும் சிறுத்தை விட்டு வைப்பதில்லை.

    இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 34). விவசாயி. இவரது வீடு வனப்பகுதியை யொட்டி உள்ளது. இவர் தனது வீட்டின் முன்பு 4 ஆடுகளை கட்டி வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மகாலட்சுமி வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆட்டுக்குட்டி அருகே மர்ம விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது.

    உடனே இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து வீடு முன்பு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரியவந்தது.

    வனப்பகுதியில் இருந்து மகாலட்சுமியின் வீட்டுக்கு வந்த சிறுத்தை அங்கு வீட்டின் முன்பு கட்டப்ப ட்டிருந்த ஆட்டுக்குட்டியை அடித்து கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டது தெரியவந்தது.

    இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வீடுகள் மற்றும் தோட்டங்கள் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு போன்ற கால்நடை களையும், நாய்களையும் வேட்டையாடி வந்தது.

    தற்போது மீண்டும் சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பீதியடை ந்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை யினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து வனத்துறை யினர் கால்நடைகளை வேட்ைடயாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் இறந்த ஆட்டுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×