search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on contingency leave strike"

    • ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 10 அம்சகோரி க்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இரவு நேர ஆய்வுகூட்டங்கள் நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகள் உயர் அலுவலர்களால் நடத்தப்படுவதை கைவிட வேண்டும்.

    தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலர் முதல் உதவி இயக்குநர் நிலைவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது.

    அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர், தாளவாடி போன்ற 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 732 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து இந்த கோரிக்ககைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்போராட்டத்தினால் 100 நாள் வேலைதிட்டம், பாரதபிரதமர் வீடுகட்டும் திட்டம் உட்பட மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து திட்ட பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    எங்களது கோரிக்கை களை அரசு நிறை வேற்றவில்லை என்றால் வருகின்ற டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×