என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
    • கரடி ஒன்று சாலையில் நடமாடியதை கண்டு அச்சமடைந்து காரை ஓரமாக நிறுத்தினர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.

    இதில் குறிப்பாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று திம்பம்-தலமலை வனச்சாலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று சாலையில் நடமாடியதை கண்டு அச்சமடைந்து காரை ஓரமாக நிறுத்தினர்.

    சாலையில் கார் வருவதை கண்ட கரடி சாலையில் இருந்து வனப் பகுதிக்குள் வேகமாக சென்று மறைந்தது. கரடி நடமாட்டத்தை காரில் சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்- அப், பேஸ்புக், உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் திம்பம்- தலமலை வனச்சாலையில் பகல் நேரத்தில் கரடி நடமாடுவதால் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கையாக இருக்கும் மாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    • நந்தினி (25) . நிறைமாத கர்ப்பி ணியான நந்தினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்சு கோவை நீதி மன்றம் நுழைவு வாயில் அருகே சென்ற போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா , கடம்பூர் மலைப்பகுதி ஒசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி நந்தினி (25) . நிறைமாத கர்ப்பி ணியான நந்தினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனை யடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புல ன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சு ஒசப்பாளையம் பகுதிக்கு வந்தது.

    அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவர், செவிலியர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துக்க ல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து 108 ஆம்புலன்சு கோவை நீதி மன்றம் நுழைவு வாயில் அருகே சென்ற போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது.

    இதையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட 108 ஆம்புலன்சு டிரைவர் ராஜ்குமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் விஜய் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

    அப்போது நந்தினி- மாதேவன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்சு மருத்துவ நுட்புநர் விஜய் மற்றும் வாகன டிரைவர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
    • நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    அந்தியூர்,

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிக விமரிசையாக குண்டம்- தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொட ங்கியது. இதனையடுத்து மகிசாசுவரா வர்தன நிகழ்வும், தொடர்ந்து கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவையொட்டி தினமும் சாமி முக்கிய வீதிகள் வழியாக ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதனால் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குண்டம் இறங்க கோவிலல் வளாகத்தில் தங்கி இருந்து வருகிறார்கள்.

    முன்னதாக நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான விறகுகளை காணிக்கை யாகவும் செலுத்தி வருகின்றார்கள்.

    அந்த விறகுகள் கோவில் வளாகத்தில் மலை போல் குவிந்து இருக்கின்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தீ மிதிக்க வரிசையில் இடம் பிடித்து பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த குண்டம் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். மேலும் அம்மனை வழிபட்டு, குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. இந்த சப்பரம் மீண்டும் 28-ந் தேதி கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்று இரவு கம்பம் சாட்டப்பட்டது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இவ்வாறு தீ மிதிக்க வருபவர்கள் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க கோவில் வளாகத்தில் பரந்த அளவில் ஏற்கனவே தகரத்திலான பந்தல் போடப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் குண்டம் இறங்குவதற்காக கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகமானோர் வந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில் நேற்று காலை முதல் வரிசையில் உட்கார்ந்து இடம் பிடித்து காத்திருக்கிறார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் உட்கார்ந்தும், படுத்து ஓய்வு எடுத்தபடியும் தீ மிதிப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

    • பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.
    • பஸ்சில் பயணம் செய்த 10-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் என்ற பகுதியில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனிக்கு நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பேர் வேலைக்கு சென்று வருகிறார்கள். இதற்காக பனியன் கம்பெனியின் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை வழக்கம் போல் தனியார் பனியன் கம்பெனி பஸ் நம்பியூர் பகுதிகளில் ஆண், பெண் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. காலை 8 மணியளவில் அந்த பஸ் நம்பியூர் அருகே உள்ள சுட்டிக்கல் மேடு நால்ரோடு என்ற பகுதியில் சென்றது. அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை அபாய கட்டத்தில் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கமேஸ்வரர் கோவில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது.
    • கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    பவானி

    ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள பவானி கூடுதுறை திருமண தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்க பரிகாரம் செய்வதற்கு உகந்த சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது.

    எனவே இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பரிகாரம் செய்து வருவது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு பரிகாரம் செய்ய வந்த வியாபாரி ஒருவர் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தையே தூக்கி சென்ற சம்பவம் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நேற்று காலை கோவில் ஊழியர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது கோவில் வில்வ மரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை அங்கு காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது காலை 6.30 மணி அளவில் காவி வேட்டி அணிந்து கொண்டு வந்த பக்தா் வில்வமரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்தை பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் அவர் சிவலிங்கத்தை அப்படியே தூக்கி சென்றதை கண்டனர். உடனே அவரை கோவில் ஊழியர்கள், பரிகார மண்டபத்தில் அவர் எங்கேனும் இருக்கிறாரா? என தேடினர். அப்போது அவர் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டனர்.

    உடனே அவரை அழைத்துக்கொண்டு வந்து ஊழியர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் பகுதியில் உள்ள கடையில் தேங்காய், பழம் விற்பனை செய்பவர் என்பதும், 41 வயது ஆகியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இதனால் அவர் ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது ஜோதிடர் ஒருவர் அந்த வியாபாரியிடம் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என கூறி உள்ளார்.

    இதை நம்பிய அந்த வியாபாரி பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து சிவலிங்கத்தை தூக்கி கொண்டு சென்று பரிகார பூஜை செய்ததும்,' தெரியவந்தது.

    இதையடுத்து பரிகாரம் செய்வதற்காக தூக்கி கொண்டு சென்ற சிவலிங்கத்தை கோவில் ஊழியர்கள் கைப்பற்றி மீண்டும் வில்வ மரத்தடியில் வைத்தனர். மேலும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அந்த வியாபாரியை கோவில் ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். திருமணம் நடக்க வேண்டி செய்யக்கூடிய பரிகாரத்துக்கு சிவலிங்கத்தையே தூக்கி சென்ற சம்பவம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.08 அடியாக குறைந்து உள்ளது.
    • அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.08 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 924 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    இதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு, ரூ.2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த அய்யாசாமி (40) என்பதும், அவரது மொபட்டை சோதனை செய்தபோது மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் அதிக லாபத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியசெம்மாண்டாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த சாமியப்பன் (80) என்பவரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.

    மேலும் மைசூர், சாம்ராஜ் நகர் உள்பட கர்நாடகா மாநில பக்தர்களும் பலர் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    இதேபோல் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள் கார், வேன், பஸ்களில் வந்து செல்கிறார்கள்.

    இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இதைதொடர்ந்து பண்ணாரியம்மன் சப்பரம் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சென்றது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    இதையடுத்து கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து தினமும் இரவு கம்ப நடனம் ஆடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குண்டத்துக்கு தேவையான எரி கரும்புகளை (விறகுகள்) காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடக்கிறது. முன்னதாக நாளை (திங்கட்கிழமை) இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எரிகரும்புகள் பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது.

    விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள்.

    மேலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கோவிலுக்கு வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இதே போல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் குண்டம் இறங்குவதற்காக சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள், வனப்பகுதி பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக வேன், லாரிகளில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளில் தங்கி இடம் பிடித்து காத்திருக்கிறார்கள்.

    மேலும் தடுப்புகளில் வேட்டி, துண்டுகளை போட்டு தங்கள் கும்பத்துடன் வரிசையில் குண்டம் இறங்குவதற்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.

    விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வேன் முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 62) சப்போட்டா பழ வியாபாரி.

    இவர் நேற்று இரவு அந்தியூரில் வேலையை முடித்துக் கொண்டு ஆப்பக்கூடல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராதவிதமாக முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் செல்போன் மூலம் அவரது மகன் பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை பார்த்து கதறி அழுதார். இதை தொடர்ந்து அவரது உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அந்தியூர் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது.
    • வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் வனப் பகுதி சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் ஏராள மான மான்கள் வசித்து வருகிறது.

    தற்போது வறட்சி நிலவுவதால் இந்த மான்களுக்கு வனத்து றை சார்பில் ஆங்கா ங்கே தண்ணீர் தொட்டி கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மான்கள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீ ரைத் தேடி சென்று வருகிறது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து சுமார் 5 வயதுடைய ஒரு ஆண் மான் தண்ணீர் தேடி அங்குள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளது.

    அப்போது அங்கு சுற்றி திரிந்த நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது. இதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சென்னிமலை கால்நடை மருத்துவர் சு.விஜயகுமார் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்தார்.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத்தனர்.

    ×